இதெல்லாம் செஞ்சா கேஸ் போடுங்க.. கோர்ட் உத்தரவு! மதுரை ஆதீனத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இதுதான்
சென்னை: தனது கார் விபத்து சம்பவத்திற்கு மத ரீதியாக சாயம் பூசிய விவகாரத்தில் மதுரை ஆதீனத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீனை நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நிபந்தனைகள் மீறப்படுமேயானால், ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 3 முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

1. விசாரணை முடியும் வரை சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாக கூடாது
2. மதுரை ஆதீனம் தலைமறைவானால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்
3. ரூ.10,000க்கான இரு நபர் ஜாமீனை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆதீனம் தாக்கல் செய்ய வேண்டும்
என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நேற்று வழக்கு விசாரணையில் போலீஸார் தரப்பில் ஆஜராகியிருந்த, பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், முன்ஜாமீனுக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தார். எனவே நிபந்தனைகள் மீறப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும்.
வழக்கின் பின்னணி:
கடந்த மே மாதம் காட்டாங்குளத்தூர் பகுதியில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பங்கேற்றிருந்தார். இதில் இவர் பேசியிருந்த விஷயங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன. அதாவது, "மாநாட்டுக்காக மே-2ம் தேதி காலை 9.30 மணியளவில் என்னுடைய கார் உளுந்தூர்பேட்டையில் வந்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு கார் எங்களை மோத முயன்றது. தடுப்புகளை உடைத்துக்கொண்டு அதிவேகத்தில் வந்த கார் எங்களை இடிக்க வந்தது. இது என்னை கொல்ல செய்யப்பட்ட சதி. இதில் பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் நீண்ட தாடியையும், குல்லாவையும் அணிந்திருந்தார்கள்" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில், ஆதீனத்தின் கார்தான் அதி வேகத்தில் சென்றது தெரிய வந்தது. இடதுபுறத்திலிருந்து வந்த கார், ஆதீனத்தின் காரின் வேகத்தை பார்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே, இரு சமயத்தினருக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஆதீனம் பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஆதீனத்தின் கார் அதிவேகத்தில் வந்ததும் உண்மை என்றும், தன்னை கொல்ல சதி என ஆதீனம் கூறியிருந்தது பொய் என்பது நிரூபணமானது. இந்நிலையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஆதீனம் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீனுக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி












Click it and Unblock the Notifications