மல்லுக்கட்டும் மூர்த்தி..கண்டுகொள்ளாத பிடிஆர்! மேயர் இந்திராணியால் மதுரையில் பரபர.. ஸ்டாலின் ஆக்சன்?
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பெரும் ஊழல் தொடர்பாக, திமுக உட்கட்சி அரசியலிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சமீபத்தில் இந்த வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தலைமை தற்போது மேயர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவியுள்ளன. திமுக நிர்வாகிகளுடனான திமுக தலைவர் ஸ்டாலினின் ஒன் டூ ஒன் சந்திப்பின் போது சில நிர்வாகிகள் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நிலையில், அதிரடிக்கு தயாராகி வருகிறது திமுக தலைமை.
மதுரை மாநகராட்சி பட்ஜெட் ரூ.1,480 கோடி அளவில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சொத்து வரி வசூல் ரூ.370 கோடி எனக் கணிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதால், கூடுதலாக ரூ.250 கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது.
மாநகராட்சியில் 4,12,000 கட்டிடங்கள் சொத்து வரி கட்டும் நிலையில், அதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவை வணிக கட்டிடங்களாகும். இவற்றின் வரி மதிப்பீட்டில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

மதுரை மாநகராட்சி ஊழல்
இந்த விசாரணையில், ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், மண்டலம் 3 தலைவர் உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் ஆய்வாளர் குமரன், கணினி ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையர் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திமுக மண்டலத் தலைவர்கள் மீதும் சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து மண்டலம் 2 தலைவர் சரவண புவனேஸ்வரி, மண்டலம் 3 தலைவர் பாண்டிச்செல்வி, மண்டலம் 5 தலைவர் சுவிதா ஆகியோர் மற்றும் அவர்களின் கணவர்கள் விசாரணை வளையத்துக்குள் வந்தனர்.
மேயர் இந்திராணி
இதனைத் தொடர்ந்து, மதுரைக்கு வந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலையில் நேரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மேயர் இந்திராணி, திமுக மண்டலத் தலைவர்கள், நகரமைப்பு வரிவிதிப்பு குழுத் தலைவர்கள் மூவேந்திரன் மற்றும் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவருடனும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக உள்கட்சிச் சிக்கல்
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் நடந்த ஒன் டூ ஒன் சந்திப்பில், சில நிர்வாகிகள் இந்த விவகாரத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மேயர் மற்றும் சில மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வற்புறுத்தியதாகவும், தற்போது அதற்கான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, மதுரை மாநகராட்சி மண்டலம் 2, 3, 5 தலைவர்கள் மற்றும் இரண்டு வரிவிதிப்பு குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
பொன் வசந்த் கைது
விசாரணை நடந்த காலகட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தியதாக மேயர் கணவர் பொன் வசந்த் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார். பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருக்கு அதிக சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதுரை மேயர் ராஜினாமா?
இந்த கைது சம்பவத்தால் மேயர் இந்திராணிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரை உடனடியாக பதவி விலகுமாறு கோரியுள்ளன. திமுகவிலும் கூட இதே கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு அரசியல் வடிவம் எடுத்துள்ள நிலையில், மேயர் இந்திராணி தனது பதவியில் தொடருவாரா அல்லது திமுக தலைமை அதிரடி முடிவெடுக்குமா என்பது தற்போது மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியுள்ளது. மேயர் இந்திராணி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜரின் நெருங்கிய ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், சில நாட்களாக தனது நிகழ்ச்சிகளில் பிடிஆர் இந்திராணியை புறக்கணித்து வருவதையும் கவனிக்க வேண்டும். எனவே, இதற்கான முடிவு எப்படியாக இருக்கும் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் மதுரை திமுகவினர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமைச்சர் மூர்த்தி பிடிஆருக்கு எதிராக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications