அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!
சென்னை: விடுபட்டவர்களில் தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் அவுரித்திடலில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், விவசாயிகள், மீனவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 2,400 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக பெண் பிரதிநிதிகளை உருவாக்கிய பெருமை முதல்வரையே சாரும்.
பெண்கள் அதிகளவில் உயர்கல்வி படிக்க தமிழக முதல்வர் கொண்டு வந்த புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளன. முன்னோடி திட்டமான காலை உணவுத் திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் மாதம் தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். விடுபட்டவர்களில் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தற்போது பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
இதையெல்லாம் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா என்று அவர் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் 2வது முறையாக முதல்வராவார்.
திமுக வெற்றி கூட்டணியை நோக்கி சென்று கொண்டிருக்கிற வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சிக் கூட்டத்தில் பேசும்போது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க பணம் கேட்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அதிமுக கூட்டணிக்கு கூப்பிட்டால் ஒரு கட்சி 200 கோடியும், 20 சீட்டும் கேட்கிறது என பேரம் பற்றி பேசி வருவதாக சொல்கிறார். அந்தக் கட்சியின் நிலை பரிதாபமாக உள்ளது” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications