Maha Shivaratri: சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி வழிபாடு.. அதிகாலை வரை சிறப்பு அபிஷேகம்
சென்னை: இன்று மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தமிழகம், புதுவையில் உள்ள சிவன் கோயில்களில் இன்று இரவு முழுவதும் 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ராமேஸ்வரம், திருவண்னாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம், சிதம்பரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மகா சிவராத்திரி நாளான இன்று சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி சிவனை வழிபாடு செய்த நாளே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் சிவன் கோயில்கள் திறந்து இருக்கும். சிறப்பு அபிஷேங்கள் நடைபெறும். நான்கு கால அபிஷேகம் நடைபெறும். சிவராத்திரி விழித்து இருந்து சிவனை வழிபட்டால் , சகல பாக்கியங்களும் கிடைக்கும். மன அமைதி, நோய் நீங்குதல், பாவ மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் சிவன் கோயில்களில் இன்று பகதர்கள் கூட்டம் அலைமோதும். சென்னையில் உள்ள கங்காதீஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சைதாபேட்டை காரணீஸ்வரர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேங்கள் நடைபெறும்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் விரிவான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்களில் இன்று இரவு சிறப்பு அபிஷேகங்கள் நடைறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications