இன்று மகாவீரர் ஜெயந்தி: மதுக்கடைகள், இறைச்சிகடைகள் இயங்காது.. சமணர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.. அகிம்சையை போதித்தவர் மகாவீரர் என்பதால் ஒவ்வொரு வருடம் போல இவ்வருடமும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதியாக மகாவீரா் அழைக்கப்படுகிறாா். இவர் பீகாாில் இருந்த ஒரு அரச ஜெயின் குடும்பத்தில் பிறந்து இளவரசராக வளர்ந்தார்..
தன்னுடைய 30வது வயதில் ஆன்மீக விழிப்புணா்வைத் தேடி தனது வீட்டை விட்டு வெளியேறினாா். பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் சுழற்சியில் இருந்து ஒருவர் விடுதலை பெற வேண்டும் என்றால், ஆன்மீகத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று மகாவீரா் கற்பிக்கிறாா்.

பிரம்மச்சாரியா
இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் அல்லது துறவற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் ஒருவா் ஆன்மீக அமைதியைப் பெற வேண்டுமென்றால் 1. அகிம்சை (வன்முறை இல்லாமை), 2. சத்யம் (உண்மை), 3. அசத்தேயா (திருடாமை), 4. பிரம்மச்சாாியா (பாலியல் உறவில் இருந்து விடுபட்டு இருத்தல்), 5. அபாிகிரகா (பற்றின்மை) என்ற 5 உறுதிமொழிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்.. மகாவீரா் கிமு 500ம் ஆண்டில் சித்திரை மாதத்தில் வரும் சுக்லா பக்ஷாவின் 13ம் நாளில் பிறந்தாா் என்று நம்பப்படுகிறது..

சீர்திருத்தவாதி
ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதியாக மகாவீரரின் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.. இது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். இந்து மக்களின் ஒளியின் விழாவான தீபாவளி அன்று மகாவீரா் நிா்வாணா அடைந்தாா். ஆகவே ஜெயின் சமூகத்தவருக்கு மகாவீரா் ஜெயந்தி தான் புத்தாண்டின் தொடக்கமாகும்... மகாவீரா் ஜெயந்தி மகாவீரா் சுவாமி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது... அந்தவகையில், மகாவீரா் ஜெயந்தி இன்றைய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சமணம்
தமிழ்நாட்டில் தொன்று தொட்டு சமணத்தைப் பின் பற்றி வாழ்ந்து வரும் மக்கள் அனைவருக்கும், தமிழக முதல்வரும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், அரசகுடும்பத்தில் பிறந்தும் செல்வச்செழிப்பைப் புறந்தள்ளி, உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம் என்ற உயர் நல்லறங்களை உலகுக்குப் போதித்தவர் வர்த்தமான மகாவீரர். அவரது பிறந்த நாளை சமண மக்கள் சிறப் பாகக் கொண்டாட ஏதுவாக, தமிழ்நாட்டில் முதன்முதலில் அரசு விடுமுறை அறிவித்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கழக அரசு.

சமணர்கள்
2002-ம் ஆண்டு அதனை அ.தி.மு.க அரசு நீக்கினாலும், 2006-ஆம் ஆண்டு 5-வது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தார். சமணர்கள் இந்திய அறிவு மரபுக்குப் பெரும் பங்காற்றியவர்கள் என்பது மட்டுமல்ல, தமிழுக்கும் எத்தனையோ இலக்கிய, இலக்கண நூல்களை இயற்றி இணையற்ற பங்களிப்பை நல்கியவர்கள். இல்லாதோர்க்கு ஈந்து, மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளாக மகாவீரர் ஜெயந்தியைப் போற்றுவோம் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

மாட்டிறைச்சி
இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், வணிகத் தளங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்றவைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. மேலும் மகாவீர் ஜெயந்தி தினமானது, மது விற்பனை இல்லாத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. எனவே, ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

மதுபார்கள்
தமிழகத்திலுள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதையொட்டி உள்ள பார்கள் மற்றும் தனியார் ஓட்டல்களில் செயல்படும் பார்கள் அனைத்தும் இன்றைய தினம் மூடப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.. அந்தவகையில், இன்றைய தினம் இறைச்சி கடைகள், மதுக்கடைகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன.

ஸ்டாலின்
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி வெளியிட்டிருந்த தன்னுடைய வாழ்த்து செய்தியில், அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்று அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் மகாவீரர். அவரது போதனைகளை பின்பற்றி வாழ்வோம் என்று தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகாவீரரின் வாழ்க்கையை மனிதகுலம் முழுமையும் கடைபிடித்தால் உலகம் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் நிறைந்த, இல்லாமை என்பதே இல்லாததாகவும் மாறும் என்றும் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து காட்டிய மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில், அவரின் போதனைகளை பின்பற்றி வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications