Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. “ஜென்டில்மேன் படத்தை பல முறை பார்த்தோம்” - ஜிம் முருகன் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட ஜிம் முருகன், போலீசாரின் விசாரணையின்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வங்கியில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக, ஜிம் முருகன், ஜெண்டில்மேன் உள்ளிட்ட வங்கிக் கொள்ளை தொடர்பான திரைப்படங்களை பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் வங்கியில் கொள்ளையடிப்பது பற்றியும், போலீசிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு மாத காலம் ரகசியமாக திட்டம் தீட்டியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஒருவர் கைதானால், அவரை ஜாமீனில் எடுப்பதற்காக நகைகளை பிரித்துப் பிரித்து வைத்ததாகவும் முருகன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியின் தங்க நகைக் கடன் கிளையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள், பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் மற்றும் காவலாளி ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கத்திமுனையில் கட்டிப் போட்டு, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

பட்டப்பகலில் துணிகர சம்பவம்

பட்டப்பகலில் துணிகர சம்பவம்

வங்கியில் பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அரும்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்த முருகன் என்பவர், தன் கூட்டாளிகளுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளை கும்பலை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடுமையான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஜிம் முருகன் கைது

ஜிம் முருகன் கைது

இந்நிலையில், கொள்ளையடித்த நகையுடன் காரில் தப்பிச் செல்ல, முருகனுக்கு உதவியதாக அவரது நண்பர் வில்லிவாக்கம் பாலாஜி, 28, சந்தோஷ் , 30, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ நகை மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளியான ஜிம் முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

28 கிலோ நகைகள் மீட்பு

28 கிலோ நகைகள் மீட்பு

முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அவரது மற்றொரு கூட்டாளி சூர்யா என்பவரிடம், 10 கிலோ தங்க நகைகளை கொடுத்தது தெரியவந்தது. அந்த நகைகளை, விழுப்புரம் மாவட்டத்தில் பதுக்கி வைத்து இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, சூர்யாவை நேற்று கைது செய்து, விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் இளையராஜா என்பவரின் வீட்டில் 10 கிலோ நகைகளை மீட்டனர்.

ஜிம் முருகன் வாக்குமூலம்

ஜிம் முருகன் வாக்குமூலம்

தொடர்ந்து, முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் முருகன் அளித்துள்ள வாக்குமூலத்தில், "சினிமா படங்களை தயாரிக்க வேண்டும். சினிமாவில் நானும் என் கூட்டாளிகளும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். வங்கியில் வேலை பார்த்ததால் கட்டுக்கட்டாக பணம், கிலோ கணக்கில் நகைகளை பார்த்ததும் கொள்ளையடிக்கும் ஆசை வந்துவிட்டது.
அது பற்றி என்னுடன் தினமும் உடற்பயிற்சி செய்யும் பள்ளி நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் கொள்ளையடிக்க சம்மதம் தெரிவித்தனர்.

ஜெண்டில்மேன் படம் பார்த்தோம்

ஜெண்டில்மேன் படம் பார்த்தோம்

இதையடுத்து வங்கியில் கொள்ளை அடிப்பது தொடர்பான திரைப்படங்களை பார்த்தோம். ஜென்டில்மேன் படத்தில், அர்ஜுன் கொள்ளையடிப்பது போல கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்தோம். வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து பல முறை பார்த்தோம். கொள்ளையடித்த வங்கியின் எச்சரிக்கை அலாரத்தின் கட்டுப்பாட்டு மையம், டெல்லியில் உள்ளது. இணையதளம் உதவியுடன் அதை துண்டித்தேன்.

Recommended Video

    சென்னை வங்கி கொள்ளை.. வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்! கொள்ளையர்கள் தப்பியது இப்படி தான்
    ரகசிய திட்டம்

    ரகசிய திட்டம்

    வங்கி லாக்கரின் சாவிகள், வங்கியில் தான் இருந்தன. அதனால், 32 கிலோ நகைகளை கொள்ளையடித்து தப்பினோம். நகைளை பிரித்துக் கொண்டோம். போலீசார் எப்படியும் என்னை பிடித்து விடுவார்கள் என்பதால் நகை விற்ற பணத்தில், மற்றவர்கள் என்னை ஜாமீனில் எடுக்க வேண்டும். யார் பிடிபட்டாலும், அவர்களை மற்றவர்கள் ஜாமினில் எடுக்க வேண்டும் என பேசி திட்டம் தீட்டியிருந்தோம்" எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகனின் வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+