சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் ஜிம் முருகன் கைது.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ளது ஃபெடரல் வங்கி. அங்கு நேற்று முன் தினம் நகைப் பிரிவில் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். இங்கு பொதுமக்களும் வங்கி சார்ந்த பணிகளுக்காக வருவதும் போவதுமாக இருந்தனர்.
அப்போது பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர் புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களை கத்திமுனையில் கட்டிப்போட்ட மர்மநபர்கள்,ரூ 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

விசாரணை
இது குறித்து தகவலின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விடிய விடிய விசாரணை
இந்த நிலையில் நேற்றுமுன் தினம் முதல் விடியவிடிய நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி ஊழியர் முருகன் என்பவர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. வங்கி காவலாளிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிகிறது. இந்த சம்பவத்தில் இன்னும் இருவருக்கும் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது.

6 தனிப்படைகள்
இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் முருகனின் உறவினர் பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து செந்தில் முருகன், சந்தோஷ் ஆகியோரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video

முக்கிய குற்றவாளி கைது
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான முருகனை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் முருகனையும் போலீஸார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகையில் 18 கிலோவை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யாவை தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications