பள்ளிகளுக்கு பறந்த "மேஜர்" உத்தரவு.. தமிழக அரசு அதிரடி.. அப்பாடா.. பெற்றோர்கள் நிம்மதி.. காரணம் என்ன
கோவையில் தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது
சென்னை: மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார்கள் வெளியாகி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் நீதி கேட்கும் போராட்டம் நடந்தது.. இந்த போராட்டம் அப்போது வன்முறையாக வெடித்தது... மாணவி தரப்பில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில், திடீரென பள்ளியில் போராட்டக்காரர்கள் புகுந்துவிட்டனர்..
அங்கிருந்த பஸ்கள், வேன்களை தீயிட்டு எரித்தனர்... டேபிள், சேர், பெஞ்சுகள், கம்ப்யூட்டர்கள், ஃபேன்கள் என ஸ்கூலில் கிடந்த பொருட்களை அடித்து நொறுக்கி, பொருட்களை சேதப்படுத்தினர்.. சில பொருட்களை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டும் ஓடினார்கள்.. இந்த நிகழ்வு தனியார் பள்ளி நிர்வாகிகளை பதறவைத்தது.

சர்குலர் வந்தது
இப்படிப்பட்ட சூழலில், மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தியது.. அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட வழிகாட்டல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறைக்கும் அனுப்பி, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப பரிந்துரைத்தது... மேலும், மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள வழிகாட்டல் நெறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தது.. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது...

பறந்த உத்தரவு
அந்த அறிக்கையில், "பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும். தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகே உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிவைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் பெற்றோர்களே பொறுப்பு என்று தமிழக பள்ளிக்கல்வித் துறையின் இந்த திடீர் அறிவிப்பானது பெற்றோர் தரப்பில் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.

திடீர் அறிவிப்பு
ஒரு பள்ளியில் வன்முறைகள், போராட்டம் வெடிக்க எத்தனையோ காரணங்கள் உள்ள நிலையில், அதற்கு மாணவர்களே காரணமாக இல்லாதபோது, பெற்றோர்கள் எப்படி காரணமாக முடியும்? பிள்ளைகளை நினைத்து கவலைப்படுவதா? நடக்க போகும் வன்முறைகளை நினைத்து கலங்கி கொண்டிருப்பதா? என்ற குழம்பியும், கலங்கியும் போயினர் பெற்றோர்கள்.. இது ஒரு விவாதமாகவும் சோஷியல் மீடியாவில் உருவெடுத்தது.. இப்படிப்பட்ட சூழலில், ஒருசில தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வெடித்து கிளம்பியுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார்களும் வெளியாகி உள்ளன.

அப்ளிகேஷன்
பள்ளி நிர்வாகம், இது தொடர்பாக படிவம் பெற்ற விவகாரம் சோஷியல் மீடியாவில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.. படிக்க வரும் பிள்ளைகள், பள்ளிகளுக்கும் எப்படி பொறுப்பேற்க முடியும்? குழந்தைகள்மீது இத்தனை பெரிய சுமையா? எதை நம்பி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது? மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பள்ளி நிர்வாகத்துக்குதானே இருக்க முடியும்? என்றெல்லாம் விவாதங்கள் ஆதங்கமாக வெடித்தன. இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்ககம் இதற்கும் ஒரு முற்றுப்புள்ளியை தற்போது வைத்து, பெற்றோர்கள் வயிற்றிலும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

நிம்மதி
அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் உறுதிமொழி படிவம் பெற்றது உறுதிபடுத்தப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications