பள்ளிகளுக்கு பறந்த "மேஜர்" உத்தரவு.. தமிழக அரசு அதிரடி.. பெற்றோர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?
பள்ளி சொத்துக்களுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் பெற்றோர்களே பொறுப்பு
சென்னை: பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், பெற்றோர்களே முழு பொறுப்பு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.. இது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.. மர்மமான முறையில் மாணவி இறந்தது தொடர்பாக, அப்போதே நீதி கேட்கும் போராட்டம் நடந்தது..
இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது... மாணவி தரப்பில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில், திடீரென பள்ளியில் போராட்டக்காரர்கள் புகுந்துவிட்டனர்..
அங்கிருந்த பஸ்கள், வேன்களை தீயிட்டு எரித்தனர்... டேபிள், சேர், பெஞ்சுகள், கம்ப்யூட்டர்கள், ஃபேன்கள் என ஸ்கூலில் கிடந்த பொருட்களை அடித்து நொறுக்கி, பொருட்களை சேதப்படுத்தினர்.. சில பொருட்களை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டும் ஓடினார்கள்.. இந்த நிகழ்வு தனியார் பள்ளி நிர்வாகிகளை பதறவைத்தது.

சர்குலர் வந்தது
இப்படிப்பட்ட சூழலில், மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தியது.. அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட வழிகாட்டல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறைக்கும் அனுப்பி, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப பரிந்துரைத்தது... மேலும், மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள வழிகாட்டல் நெறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறது.. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது...

பறந்த உத்தரவு
இதனை உடனே அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்: "ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட்டு, அதில் குறைபாடு கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும்... தவறான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால், முதலில் அவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்க வேண்டும். அடுத்தடுத்து தவறான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஒழுங்கு முறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.

டிரான்ஸ்பர்
பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும். தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகே உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிவைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் பெற்றோர்களே பொறுப்பு என்று தமிழக பள்ளிக்கல்வித் துறையின் இந்த திடீர் அறிவிப்பானது பெற்றோர் தரப்பில் அதிர்ச்சியை உண்டுபண்ணி உள்ளது..

திடீர் அறிவிப்பு
ஒரு பள்ளியில் வன்முறைகள், போராட்டம் வெடிக்க எத்தனையோ காரணங்கள் உள்ள நிலையில், அதற்கு மாணவர்களே காரணமாக இல்லாதபோது, பெற்றோர்கள் எப்படி காரணமாக முடியும்? கள்ளக்குறிச்சி வன்முறையிலும், உள்ளே நுழைந்தது மாணவர்கள் கிடையாதே? அப்படி இருக்கும்போது, நடக்க போகும் வன்முறைகள் அனைத்துக்கும் பெற்றோர்கள் எப்படி பொறுப்பாக முடியும்? பிள்ளைகளை நினைத்து கவலைப்படுவதா? நடக்க போகும் வன்முறைகளை நினைத்து கலங்கி கொண்டிருப்பதா? என்ற குழம்பியும், கலங்கியும் போயுள்ளனராம் தமிழக பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள்..!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications