Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊருக்கு போறீங்களா.. ரயில்ல போறீங்களா.. அப்ப உங்களுக்குதான் இந்த அறிவிப்பு.. ரயில்வேயின் அடுத்த அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது.. அந்தவகையில், இப்போதும் ஒரு சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் எப்போதுமே முன்பதிவு வசதி உள்ளது.. செல்போன், கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வெப்சைட்கள், ஆப்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

முன்பதிவு: எனினும், முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் பதிவு செய்ய கடைசி நேரத்தில் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி இருக்கிறது. ‌ இதை தவிர்ப்பதற்காகத்தான், முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் சமீபத்தில் செய்யப்பட்டன..

Major Announcement of IRCTC Indian Railways and Introducing a new facility for Train Booking

ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் மொபைல் ஆப் (UTS App) செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக பயண சீட்டுகளை பதிவு செய்யலாம். மேலும் சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளலாம். சீசன் டிக்கெட்டுகளை எளிதாக புதுப்பித்தும் கொள்ளலாம். ரயில் நிலையத்திலிருந்து 15 மீட்டர் தொலைவு முதல் 20 கிலோமீட்டர் வரை ரயிலுக்கு புறப்படுவதற்கு முன்பு வீட்டில் இருந்தே பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம்.

பயணச்சீட்டு: காகிதம் இல்லாத மற்றும் காகிதத்துடன் கூடிய பயண சீட்டுகள் பதிவு செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லாத பயணச் சீட்டு என்பது நாம் பயண சீட்டு பதிவு செய்த மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் "காண்க டிக்கெட்" (SHOW TICKET option) பகுதியில் உள்ள பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதரிடம் காண்பித்துக் கொள்ளலாம்.

இதைத்தவிர, சிறு சிறு கடைகளில் வணிக நிறுவனங்களில் உள்ளது போல க்யூஆர் கோட் (QR code) அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணச்சீட்டு அலுவலகம் அருகே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக் கியூ ஆர் கோட் -ஐ ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து, மின்னணு வசதி வாயிலாக பணம் செலுத்தி முன்பதிவு இல்லாத பயண சீட்டு எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்... இப்படி எத்தனையோ வசதிகளை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது.

அடுத்த அதிரடி: இப்போது இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, ஐ.ஆர்சிடிசி இணையதள டிக்கெட் முன்பதிவில், ரயில் நிலைய ஊர் பெயர்களை எளிதில் கண்டறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ரயில் நிலையங்களில் ஊர் பெயர்களை எளிதில்கண்டறியும் வகையில், மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. .

இந்த திட்டத்தின்படி, 175 நகரங்களில் உள்ள, 725 ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறிய ரயில் நிலையங்களை அடையாளம் காணும் வகையில், பிரபலமான பகுதிகள், நகரங்கள் ஆகியவை, அந்த சிறிய ரயில் நிலையங்களின் பெயருடன் இணைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையை தேடும்போது, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் காண்பிக்கும். அதேபோல், முக்கிய நகர் பெயரை தேடும்போது, அங்குள்ள மற்ற ரயில் நிலையங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

இணையதளம்: இவற்றை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் பயணியர் பார்க்க முடியும். இத்துடன், பராமரிப்பு காரணங்களால், ரயில் புறப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால், அதற்கு பதிலாக மாற்று ரயில் நிலையத்தை காட்டியும் பயணிகளுக்கு இது உதவுகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+