எல்லாம் ஓவர்.. தமிழக அரசு வெளியிட்ட மிகப்பெரிய அறிவிப்பு.. ரேஷன் கடைக்கு போறவங்க.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கருவிழி பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
விரைவில் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல்.
பயோமெட்ரிக் முறையில் வயதானவர்களால் சரியாக கைரேகை பதிவு செய்ய முடியாததால் மாற்றுத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வருடத்தில் எல்லா நகரத்திலும், மாநகரத்திலும் குறைந்தது 90% ரேஷன் கடையிலாவது இந்த திட்டம் அமலுக்கு வரும். கடைகளில் ஏற்கனவே பயோமெட்ரிக் உள்ளது.
கருவிழி சரிபார்ப்பு முறை: வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும்.
வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையை கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள். அது முற்றிலுமாக தடுக்கப்படும்.
சுகாதாரம்; இது போக சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரிசி, சர்க்கரை. கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை எடையில் மாற்றம் இருக்காது. பொருட்களும் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
அதோடு மக்களுக்கு விநியோகம் செய்யவும் எளிதாக இருக்கும் என்பதால் அரசு இந்த மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளது. மேலும் விலையில்லா வேட்டி, சேலை குறித்தும் தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்குள் விலையில்லா வேஷ்டி வேலை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளது. இதற்கான கொள்முதல் தற்போது நடந்து வருகிறது.
தேசிய அளவில் கவனம்: தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது. இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலை குறித்தும் தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications