"மிஸ் பண்ணாதீங்க".. சிறுசேமிப்பில் முதலீடு செய்வோருக்கு.. மத்திய அரசின் புது அதிரடி அதென்ன சான்றிதழ்
சென்னை: சிறு சேமிப்பில் முதலீடு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. என்ன அது?
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.. அதில் ஒன்றுதான் சிறு சேமிப்பு திட்டங்களாகும்.

சிறுசேமிப்புகள்: இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானது.. ஓரளவு அதிக வட்டி அளிக்ககூடியதுமாகும்.. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன.
அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை.. அதுமட்டுமல்ல, இதில் வட்டி குறைந்துவிடுமோ? அல்லது முதலீடு முழுவதுமாக போய்விடுமோ? என்றெல்லாம் பயம் தேவையில்லை.. காரணம், சில சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டித் தொகை வழக்கமான வட்டியை விட அதிகமாகவே இருக்கின்றன.. சிலவற்றுக்கு வரிச்சலுகையும் இருக்கின்றன.. வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதங்கள்: அதனால்தான், மற்ற திட்டங்களை காட்டிலும், சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடன் வசதியை வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்...
மேலும், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய சில விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறு சேமிப்பு திட்டங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் வருமான சான்று கட்டாயமாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடு: இது குறித்து மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், "சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களிடம் வருமான சான்றை தபால் அலுவலக ஊழியர்கள் வாங்க வேண்டும் என இந்திய தபால் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் தீவிரவாதம், பண மோசடி போன்றவற்றுக்கு சிறு சேமிப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தாமல் இருக்க KYC விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக அமல்படுத்தி இருக்கிறது. மேலும் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் அவர்களின் ரிஸ்க் அடிப்படையில் குறைந்த ரிஸ்க், நடுத்தர ரிஸ்க், அதிக ரிஸ்க் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
குறைவான முதலீடு: அதில் குறைந்த ரிஸ்க் முதலீட்டாளர்கள் 50,000 ரூபாய் வரை முதலீடு செய்வார்கள், அதேபோல, நடுத்தர ரிஸ்க் முதலீட்டாளர்கள் 50,000 ரூபாய்க்கு மேல், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்வார்கள், அதிக ரிஸ்க் முதலீட்டாளர்களோ, சிறு சேமிப்பு திட்டங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வார்கள், அதில் அதிக ரிஸ்க் முதலீட்டார்கள் தங்கள் வருமான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்" என மத்திய அரசு அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.. இந்த உத்தரவானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications