மக்கள் நீதி மய்யத்தின்.. தலைமை நிலையப் பரப்புரையாளராக.. அனுஷா ரவி நியமனம்.. கமல் அறிவிப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவியை நியமித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் மும்முராக ஈடுபட்டுள்ளன.

அதேபோல இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேக ஆகியவை மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தங்கள் கூட்டணியை அறிவித்துள்ளன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக டாக்டர் அனுஷா ரவியை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வித் துறையிலும், தொழில் முனைவிலும் நெடிய அனுபவம் கொண்ட டாக்டர். அனுஷா ரவியின் வருகை கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம் போல சிறப்பான ஒத்துழைப்பை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications