அண்ணாநகரில் பொன்ராஜ். விருகம்பாக்கத்தில் சினேகன் மநீம கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளர்கள் பெயரை இன்று வெளியிட்டார்.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அண்ணாநகரில் பொன்ராஜ் போட்டியிடுகிறார். வில்லிவாக்கத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, விருகம்பாக்கம் தொகுதியில் சிநேகன் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதிமுக, திமுக, அமமுக,மநீம கட்சிகள் கூட்டணி கட்சியினருடன் தொகுதிப்பங்கீடுகளை முடித்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஐஜேகே, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஐஜேகே, சமகவிற்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
98 இடங்கள் போக மீதமுள்ள 136 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
வில்லிவாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தோஷ்பாபு போட்டியிடுகிறார்.
விருகம்பாக்கம் தொகுதியில் சிநேகன், சைதா பேட்டை தொகுதியில் ஸ்னேகா மோகன் தாஸ், பல்லாவரம் தொகுதியில் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாம்பரம் தொகுதியில் சிவ. இளங்கோ போட்டியிடுகிறார்.
விராலிமலையில் சரவணன் ராமதாஸ், ஆண்டிபட்டி குணசேகரன், அருப்புக்கோட்டை உமாதேவி ஆகியோர் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பெயர் வெளியாகவில்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications