கமல்ஹாசன் கட்சிக்கு வந்த சோதனை! மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளரை கைது செய்த கர்நாடக போலீஸ்!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் சரவணன் என்பவரை பண மோசடி வழக்கில் கர்நாடக போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது.
சரவணனை பிடிப்பதற்காக மஃப்டியில் வந்திருந்த கர்நாடக போலீஸார், துப்பாக்கி முனையில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் ஒருவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளராக இருப்பவர் சரவணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு பெற்று ஊருக்கு வந்தவர். குடியாத்தத்தில் சொந்தமாக ஸ்ரீநாராயணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்ததோடு கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் சில கொடுக்கல் வாங்கல் வைத்திருந்திருக்கிறார் சரவணன்.

கர்நாடக போலீஸ்
அதில் சிக்கல் எழுந்ததை தொடர்ந்து சரவணன் மீது பெங்களூர் போலீஸில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக பெங்களூரிலிருந்து 3 போலீஸார் மஃப்டியில் குடியாத்தம் வந்தனர். சரவணன் வழக்கம் போல் தனது டூவிலரில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்த போது அவரை மடக்கிய கர்நாடக போலீஸ் தங்களுடன் பெங்களூர் வருமாறு சரவணனை அழைத்துள்ளது.

சாலையில் சண்டை
ஆனால் அவர்களுடன் செல்ல மறுத்த சரவணன், சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளார். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் இது தொடர்பாக குடியாத்தம் போலீஸாருக்கு தகவல் கூறி வரவழைத்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் நடத்திய விசாரணையில், சரவணனை கைது செய்ய வந்திருப்பது பெங்களூர் போலீஸ் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கின் விவரத்தை கேட்டறிந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளரை பெங்களூர் போலீஸாருடன் அனுப்பி வைத்தது தமிழக போலீஸ்.

அரசியல் வட்டாரம்
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் ஒருவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications