47 வயதுதான்.. கொரோனா கொடுமை.. மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி பரிதாப மரணம்
சென்னை: சென்னை மாம்பலம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 47.
சென்னையில் கொரோனா பாதிப்பு என்பது மிகவும் அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்தது தான். இன்று மட்டும், 1,276 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
மருத்துவ ஊழியர்களை போலவே காவல்துறையினரும் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில்தான் மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இன்ஸ்பெக்டர் பலி
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று, உயிரிழந்தார். முன்பு அவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆகும்.

முதல் போலீஸ் அதிகாரி
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த முதல் போலீஸ் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை சுமார் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பல அதிகாரிகள் குணமடைந்தனர்
அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் முத்துசாமி போன்ற உயர் அதிகாரிகளும், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் இன்ஸ்பெக்டர் பாலமுரளி நோயின் காரணமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் இரங்கல்
முன்னதாக இன்று காலை முதல்வரின் தனி செயலாளர் தாமோதரன் நோய் தொற்று காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று அது பலனளிக்காமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாலமுரளி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பபழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலமுரளி குடும்பத்தில், தகுதியின் அடிப்படையில், ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications