ரயில்வேயில் வேலை... 4 பேரிடம் ஆசைக்காட்டி சுமார் ரூ.60 லட்சம் அபேஸ் செய்தவர் கைது
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(38). பொறியியல் பட்டதாரியான இவர் சரிவர வேலை கிடைக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ்(40) என்பவருடன் தங்கராஜுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது சுரேஷ் தென்னக ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.13 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

ஆனால் தங்கராஜுக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை வாங்கித் தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து சுரேஷிடம் தங்கராஜ் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். பணம் கிடைக்காததால் விரக்தியடைந்த தங்கராஜ், பணம் தராமல் சுரேஷ் தன்னை ஏமாற்றி தலைமுறைவாகிவிட்டதாகக் ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகாரளித்தார்.
இந்த புகாரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு அனுப்பிய காவல் ஆணையர் சந்தீப்ராய் உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சுரேஷ் தங்கராஜை மட்டுமின்றி, ஸ்ரீநாத், கார்த்திக்குமார், திருமல்லேஸ் ஆகிய பட்டதாரிகளிடமும் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 4 பேரிடமும் மொத்தம் ரூ.59.37 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த சுரேஷை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுரேஸ் நேற்று போலீசாரிடம் சிக்கனார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications