சென்னை ஈசிஆரில், ராங் சைடில் வந்து பெண் எஸ்ஐயிடம் 'ராங்' பேச்சு.. மறக்க முடியாத தண்டனை
சென்னை: சென்னை ஈசிஆரில், ராங் சைடில் பைக்கில் வந்த ஆட்டோ ஓட்டுநரை பெண் எஸ்ஐ தடுத்துள்ளார். அவரை தடுத்து ஆபாசமாக பேசி மிரட்டியதால் கைது செய்தனர். கைதான ஆட்டோ டிரைவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீலாங்கரையில் ஒரு வாரத்திற்கு தினசரி காலை, மாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.
சென்னையில் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வருவோரை படம்பிடிக்க தானியங்கி கேமராக்கள் உள்ளன. ஆனால் ராங் சைடில் வருவோரை போலீசார் பார்த்து, கண்டித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தான் நிலைமை உள்ளது. சிக்னலை மதிக்காமல் சென்றால் கண்டிப்பாக வீடு தேடி அபராதம் வரும்.

ஆனால் ராங் சைடில் சென்றால், போலீசாக பார்த்து தான் அபராதம் விதிப்பார்கள்.. மிகவும் நெருக்கடியான சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் ராங் சைடில் வந்தால் அவர்களை போலீசார் எச்சரித்து, நேராக செல்லுமாறு அறிவுறுத்துவார்கள்.
சென்னையில் ஈசிஆர் சாலையில் நீலாங்கரை பகுதியில் ராங்சைடில் வருவது அதிகமாக உள்ளது. இதேபோல் ஓஎம்ஆர் சாலையிலும் பல இடங்களில் சுற்றி செல்வதற்கு யோசித்து ராங் சைடில் வருவது அதிகமாக உள்ளது. ஈசிஆர் சாலையை பொறுத்தவரை ராங் சைடில் வருவதை கண்காணிக்க எப்போதும் போலீஸ் இருப்பார்கள்.
ஏனெனில் குறிப்பிட்ட நீலாங்கரை சாலை மிகவும் குறுகிய சாலை. இதனால் நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக போலீஸ் நிற்பார்கள். அப்படித்தான் அண்மையில் போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது வெட்டுவாங்கெணியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விவேக் என்பவர் சாலை விதியை மீறி வாகனம் இயக்கி வந்துள்ளார். அவரை அங்கு நின்றிருந்த பெண் எஸ்ஐ பிரியா தடுத்துள்ளார். மேலும் அவரிடம் பெண் எஸ்ஐ பிரியா விசாரணை மேற்கொண்டார்.
அப்போது எஸ்ஐ பிரியாவை ஆட்டோ டிரைவர் விவேக் ஆபாசமாக திட்டியுள்ளார். இதுகுறித்து உடனடியாக பிரியா புகாரளித்த நிலையில் டிரைவர் விவேக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட விவேக் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்துக்கு போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவேக்குக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் விவேக் ராங் சைடில் வந்து ராங்காக பேசிய நீலாங்கரையில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications