ரூ.25 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு.. டெலிவரி பாயாக மாறிய ஊழியர்.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க! கதறும் பெற்றோர்
சென்னை: இன்னும் ஒரு வருடத்தில் திருமணத்தை வைத்து கொண்டு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளமாக கிடைக்கும் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஊழியர் ஒருவர் டெலிவரி பாயாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் பின்னணி குறித்த காரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள நிலையில் அவரது பெற்றோர் கதறுகின்றனர். அப்படி என்ன காரணம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கல்லூரி படிப்பை முடிக்கும் பெரும்பாலன மாணவ-மாணவிகளின் 6 டிஜிட் சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு பணி செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அதேவேளையில் நல்ல வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் தொழில் தொடங்குவார்கள்.

ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா? என்றால் கிடையாது. சிலருக்கு எளிமையாக அவர்கள் விரும்பும் வேலை கிடைத்து விடும். ஆனால் சிலருக்கு வேலை கிடைத்தாலும் எதிர்பார்த்த சம்பளம் இருக்காது. அதேவேளையில் புதிய தொழில் தொடங்கினாலும் சிலர் சக்சஸ் ஆவார்கள். பலருக்கும் அது ஃபெயிலியர் ஆவது உண்டு.
இப்படியான சூழலில் தான் தனியார் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சத்தை சம்பளமாக பெற்ற இளைஞர் ஒருவர் அந்த பணியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் டெலிவரி பாயாக பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த திடீர் முடிவுக்கு அந்த ஊழியர் சொன்ன காரணத்தை கேட்டு அவரது பெற்றோர் கதறுகின்றனர்.
இதுதொடர்பான வலைதள பதிவு தற்போது இணையதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. என்ஜி வி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛என்னுடைய நண்பர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வாங்கி யசம்பளத்தை விட்டுவிட்டு ஸ்விக்கி டெலிவரி/ரேபிடோவில் பணியாற்றி வருகிறார். நான் ஜோக்கிற்காக இதனை சொல்லவில்லை. அவரது பெற்றோர்எனக்கு போன் செய்து அழுதார்கள். அடுத்த ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதோடு இப்போது தான் கார் வாங்கியுள்ளார்.
A friend of mine left his 25 lpa+ job to become a Swiggy / Rapido driver. And no I'm not joking.
— enji vi (@original_ngv) December 3, 2025
His parents called me asking me to talk sense into him, crying literally. He was going to get married next year. And just bought a car.
I spoke with him, and the reason shocked me.…
இதனால் அவரது பெற்றோர் கவலையடைந்தனர். நான் அவரிடம் பேசினேன். அப்போது அவர் கூறிய காரணம் என்னை அதிர வைத்தது. அவர் ஏராளமான மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசிக்கிறாராம். இவர்களுக்காக ‛கிளவுட் கிச்சன்' (உணவு டெலிவரி மட்டும்) தொடங்க உள்ளாராம். அதற்கு முன்பாக அவர்கள் விரும்பும் உணவு என்ன? அதனை சமைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள பணியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்காக சில வாரங்கள் வரை ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்போது அவர் 12 SKU -வை மனதில் வைத்துள்ளார். அதேபோல் குறைந்த விலைக்கு அதிக விலைக்கு பொருட்களை வழங்கவும், அதன்பிறகு 3 முதல் 4 மாதங்கள் கழித்து லாபம் சம்பாதிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த செயலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் நண்பர்கள் பலரும் கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என கூறியுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் , இன்னொரு தரப்பினர் முட்டாள்தனமான முடிவு என்று கூறி வருகின்றனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications