பொன்னியின் செல்வன் 2.. மணிரத்னம், ஜெயமோகனின் “இந்துத்துவ” திணிப்பு - எழுத்தாளர் முருகவேள் காட்டம்
சென்னை: கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் திரைப்படத்தில் இந்துத்துவ பார்வையை மணிரத்னமும் ஜெயமோகனும் திணித்து இருக்கிறார்கள் என்று எழுத்தாளர் இரா முருகவேள் விமர்சனம் செய்து இருக்கிறார்.
பொன்னியின் செல்வனை வரலாறு என்று நினைத்துக் கொள்ள போதுமான காரணங்கள் இருக்கின்றன. முதல் பாகத்தில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு அப்படியே கொடுக்கப் பட்டிருக்கும். தவிர சோழர் பாண்டியர் போர்கள், சோழர் ராட்டிற கூடர் போர்கள் ஆகியவை இடையிடையே வந்து கொண்டே இருக்கும். கைக் கோளப் படை, வேளை க்கார படை போன்ற வரலாற்று நிறுவனங்கள் இடம் பெறும்.
பிரச்சினை கல்கியில் இல்லை. உண்மை வரலாறு என்று தேடி நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டரத்தாருக்குப் போனாலும் சற்றேறக் குறைய இதேதான் இருக்கும். வரலாற்றை மன்னர்கள் வரிசையாக பார்க்கும் முறை இன்னும் மாறவில்லை. உற்பத்தி முறையில் இருந்து வரலாற்றை பார்க்கும் முறை இங்கே துண்டு துண்டாக உள்ளது. இன்னும் இவை முறையாகத் தொகுக்க பட்டு ஒழுங்கு படுத்தல் செய்யப்பட வில்லை.
உதாரணமாக சோழர் ஈழத்தின் மேல் படையெடுத்த தற்கு அங்கே உள்ள செருவி லா என்ற செம்புச் சுரங்கங்களை கைப்பற்றும் நோக்கமும் இருந்தது என்று கேமில் ஸ்வெலபில், பத்மா கைமல் ஆகியோர் கூறுகின்றனர். ஈழம் ஆகிரமிக்கப் பட்டு செம்பு தடையில்லாமல் கிடைத்தது நடராஜர் செப்புத் திருமேனிகள் முழு வடிவம் பெற உதவின என்கின்றனர் இவர்கள்.
போர்க்களங்களில் ஆடப்பட்ட கொற்றவை நடனம், அதன் உருவகமான உக்கிர கொற்றவை சிற்பங்கள் புதிதாக சைவத்துக்கு மாறிவந்த சமண உயர்குடிக்கு விளக்கத்தை தந்ததால் கொற்றவை உருவம் அழகே உருவான நடனமாடும் சிவனாக மாறியது என்பது இந்த ஆய்வுப்பள்ளியின் பார்வை. கைலாசபதி, வானமாமலை, கரோஷிமா, சாந்தலிங்கம், ராஜன், சிவ சுப்பிரமணியன் போன்றோரின் ஆய்வுகளே ஓரளவு சமூக வரலாற்றை கூறக் கூடியவை.
தென்னகத்தின் கப்பல் கட்டும் கலை, கோவிலுக்கும் அரசுக்கும் உள்ள உறவு ஆகியவை பற்றிப் பேசும் ரோமிலா தாப்பர் போன்றோரின் ஆய்வுகளும் உள்ளன. தமிழ் நாட்டின் வரலாற்றுப் பார்வை அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். அது தாமதம் ஆக ஆக பின்னடைவுதான் நடக்கும். கல்கி வந்த தூரத்தை கூட பின்னால் தள்ளும் ஜெயமோகன் போன்றவர்கள் முன்னால் வருவது நடந்தே தீரும்.
மந்தாகினி தேவி பழைய நினைவுகள் மறந்து வீர பாண்டியன் உடன் சேர்ந்து வாழ்ந்து கருவுற்றார் என்று கல்கி எழுதுகிறார். ஜெயமோகன் மணிரத்னம் குழு அந்த சுதந்திரத்தை கூட மந்தாகினிக்கு கொடுக்காமல் அதை ஏதோ சுந்தர சோழனை பழிவாங்க வீர பாண்டியன் செய்த பாலியல் வன்முறை என்கின்றனர்.

இன்னொருவரை பெண்கள் மனதாலும் நினைக்க கூடாது என்ற இந்துத்துவ மன நிலையை அந்த பண்பாடு இல்லாத மீனவ பெண்கள் மீதும் திணிக்கின்றனர் பாருங்கள். மணிரத்னம் தனது மற்ற படங்களில் இந்த விஷயங்களை இப்படி பார்த்தது இல்லை. எல்லாம் சகவாச தோஷம். மொத்த வரலாற்றுக்கும் இதுதான் நடந்தது. இப்போதும் நடக்கிறது." என்று பதிவிட்டு உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications