மங்காத்தா வந்ததால்.. மக்களிடம் வரலாற்று உண்மையை கொண்டு சேர்க்க முடியவில்லை! மோகன் ஜி வேதனை
சென்னை: மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதால், மக்களிடம் வரலாற்று உண்மையை கொண்டு சேர்க்க முடியவில்லை என்று திரௌபதி திரைப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி வருத்தப்பட்டிருக்கிறார்.
விஜய்யின் தெறி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்வதாக தகவல்கள் வெளியான நிலையில், திரௌபதி -II திரைப்படம் வெளியாகிறது. எனவே, திரைப்படம் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று மோகன் ஜி கேட்டுக்கொண்டார். இப்படி இருக்கையில், திரௌபதி -II வெளியான அதே நேரத்தில் மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

மங்காத்தா ரீ-ரிலீஸ் காரணமாக, மக்களிடம் வரலாற்று உண்மையை கொண்டு சேர்க்க முடியவில்லை! மோகன் ஜி வேதனை தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில், "திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை..
பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை..
மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G.." என பதிவிட்டிருக்கிறார்.
அப்படி என்ன வரலாற்று கருத்தை, திரௌபதி 2 திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதேபோல, மங்காத்தா திரைப்படத்தை தள்ளி வைத்திருக்க வேண்டும் என்றும் மோகன் ஜி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
