வெளியான புதிய சிசிடிவி ஆதாரம்! வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பிய மனோ மனைவி! அடுத்தது என்ன?
சென்னை: பாடகர் மனோவின் மனைவியின் புகாரின் பேரில் தனது மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
16 வயது சிறுவன் மற்றும் 20 வயது இளைஞர் மீது மனோவின் மகன்கள் தாக்குதல் நடத்தியதாக வந்த புகாரை தொடர்ந்து அவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் , மனோ மகன்களை 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக புதிய சிசிடிவி வீடியோ வெளியானதை அடுத்து பரபரப்பு எழுந்துள்ளது.

சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு ஷாகீர், ரபீக் என இரு மகன்கள் உள்ளனர். கடந்த 10-ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் குடிபோதையில் நின்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர், மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த மனோவின் மகன்கள், எதற்காக எங்களது வீட்டை நோட்டமிட்டவாறு செல்கிறீர்கள் என கேட்டதாக தெரிகிறது.
மேலும் 16 வயசு சிறுவனையும் கிருபாகரன் என்ற 20 வயசு இளைஞரையும் மனோவின் மகன்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனை கண்டதும் அவர்களுடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் 16 வயசு சிறுவன், கிருபாகரன் இருவரையும் அவர்கள் முட்டிப் போட வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்பட்டது.
இதுகுறித்து புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் (28), தர்மா (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மனோவின் மகன்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதனிடையே மனோவின் மகன்கள் தரப்பிலும் தங்களை எதிர்தரப்பினர் தாக்கியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிறுவர்களை மனோவின் மகன்கள் போலீஸார் முன்னிலையில் தாக்குவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாடகர் மனோவின் மகன்கள் ஷாகீர், ரபீக் ஆகியோரை 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டுக் கட்டை , கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில் மனோவின் மகன்கள் இருவரையும் 16 வயசு சிறுவன் உள்பட 8 பேரும் கல், உருட்டுக் கட்டையால் தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது மகன்களை 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக மனோவின் மனைவி ஜமீலா சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது ஒரு புறமிருக்க , மனோவின் மகன்களை 10 நாட்களாக காணவில்லை. அவர்கள் சென்னை ஈசிஆர் சாலையில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு தேடி பார்த்தனர். அங்கும் அவர்கள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆந்திராவில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்ததையடுத்து அங்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர். அங்கும் அவர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications