தயவு செஞ்சு யாரும் இந்த மொபைல் ஆப்புல கடன் வாங்காதீங்க.. இல்லாட்டி உங்களுக்கே ஆப்பா தான் முடியுமாம்
சென்னை: தயவுசெஞ்சு யாரும் இந்த மொபைல் ஆப்புல கடன் வாங்காதீங்க என்று நெட்டிசன்கள் பலர் எச்சரித்து வருகிறார்கள். மொபைல் ஆப் கடன்கள் எந்த அளவிற்கு தந்திரமானது, அது உங்களை எந்த அளவிற்கு உளவு பார்க்கும்? உங்கள் வாழ்க்கையில் அதனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை வெளிப்படையாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
கடன் யார் ஆன்லைனில் கொடுத்தாலும் வாங்கிவிடுவது சிலர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி கடன் வாங்கினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமல் காலெமல்லாம் கஷ்டப்படுவோர் பலர் இருக்கிறார்கள். கடன் வாங்குவது தவறு என்றால், ஆப்களில் கடன் வாங்குவது மிகப்பெரிய தவறு ஆகும்.

மொபைல் ஆப்களில் கடன் வாங்கினால் அதிக வட்டி என்பதுடன், கட்ட முடியாத நிலை ஏற்பட்டால், உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் கடன் வாங்கி தகவலை மெசேஜ் ஆக வாட்ஸ் ஆப்பில் அனுப்புவார்கள். உங்கள் நண்பர்களுக்கு அழைத்த உங்கள் கடனை கட்ட சொல்லி திட்டவும் செய்வார்கள். இதன் மூலம் அவமானத்திற்கு பயந்து கடனை கட்டுவீர்கள் என்பதால் இப்படியான டெக்னிக்கை மொபைல் ஆப் கடன் நிறுவனங்கள் சில செய்து வருகின்றன.
அண்மையில் இதனால் சிலர் பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு கொஞ்சம் குறைந்த நிலையில், மீண்டும் கடன் தருவதில் மொபைல் ஆப்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில்லரை கடன்கள் அதிக வட்டிக்கு மொபைல் ஆப்கள் தருகின்றன. சில்லறை கடன்களை சரியாக கட்டிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் கட்டாவிட்டால் மிகப்பெரிய சிக்கல் வரும்.
Dear friends and followers.
— சொல்லக்கூடாதாம் ⭐ (@Sollakudatham) October 31, 2023
தயவுசெஞ்சு யாரும் இந்த மொபைல் appல கடன் வாங்காதிங்க. நீங்க மொபைல் ஆப்ல கடன் வாங்குறப்போ அது உங்களுக்கே ஆப்பா தான் வந்து முடியும். அவனுங்க நீங்க கடன் வாங்குறப்பவே உங்க போன ஹேக் பண்ண எல்லா அனுமதியும் உங்கக்கிட்ட வாங்கிடுறாங்க. இது உங்கள மட்டும்
இதுபற்றி நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "தயவுசெஞ்சு யாரும் இந்த மொபைல் ஆப்பில் கடன் வாங்காதிங்க. நீங்க மொபைல் ஆப்பில் கடன் வாங்குறப்போ அது உங்களுக்கே ஆப்பா தான் வந்து முடியும். அவனுங்க நீங்க கடன் வாங்குறப்பவே உங்க போன ஹேக் பண்ண எல்லா அனுமதியும் உங்கக்கிட்ட வாங்கிடுறாங்க. இது உங்கள மட்டும் இல்ல உங்க குடும்பத்தையே பாதிக்கும்.
முடிஞ்ச வரைக்கும் அவசர தேவைகளுக்கு உங்கள தயார்படுத்திக்கோங்க. ஒரு 2000₹ தெரிஞ்சவங்கக்கிட்ட கடனா வாங்குறதுக்கு யோசிச்சா நீங்க உங்க பணத்தை மட்டும் இல்ல மான மரியாதை எல்லாத்தையும் இழக்கனும். அவங்க கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம உங்க வீட்டு பொண்ணுங்கள அசிங்கமா மார்ப்பிங் பண்ணி உங்களுக்கே அனுப்புவாங்க உங்க சொந்தக்காரங்க போன் நம்பருக்கு உங்கள பத்தி தப்பா பேசுவாங்க. எவ்வளவோ அசிங்கப்பட வேண்டும். தயவுசெய்து இந்த தப்ப பண்ணாதிங்க. என்னோட நண்பன் ஒருத்தன் இப்போ Hero rupee என்ற ஒரு ஆப்ல வாங்கி இப்போ கஷ்டப்படுறான்.இதுபோன்ற ஆப்களில் கடன் வாங்கி கஷ்டப்படவேண்டாம்ஞ என்று நெட்சன் ஒருவர் எச்சரித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications