மைத்ரேயன் மட்டுமில்லையாம்! மொத்தமாக பெரும் கூட்டத்தையே தூக்கும் பாஜக! அமித்ஷாவின் "தமிழ்நாடு" பிளான்
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். இன்னும் 1 வாரத்தில் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வடஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதங்களில் பல தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். வட மாநிலங்களில் முக்கியமாக காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை துறந்துவிட்டு பாஜகவில் இணைந்தனர்.
வடஇந்தியாவில் பாஜக தொடர் வெற்றிகளை குவிக்க இந்த பார்முலா பெரிய அளவில் உதவியது. அதே போன்றதொரு பார்முலாவை தென் இந்தியாவிற்கும் பாஜக கொண்டு வந்து உள்ளது. அதாவது தென்னிந்தியாவில் இருக்கும் முக்கியமான அரசியல் தலைவர்களை பாஜகவிற்கு இழுக்க அமித் ஷா அண்ட் கோ முடிவு செய்துள்ளதாம்.

என்ன முடிவு?: காங்கிரஸ் மூத்த தலைவரான அந்தோணியின் மகன் அனில் அந்தோணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அந்தோணி காங்கிரசில் முக்கிய தலைவர். மத்திய அமைச்சராக இருந்தவர். காங்கிரசின் முகமாக அவர் திகழ்ந்து வந்தார். அப்படிப்பட்ட அந்தோணியின் மகன் பாஜகவில் இணைந்தது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவராக திகழ்ந்து வருபவருமான கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்து உள்ளார். அதேபோல் கர்நாடகாவில் சுதீப் கிச்சா பாஜகவில் இணைந்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவிற்காக இவர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். ஆனால் தேர்தலில் போட்டியிட போவதில்லை. மேலும் நடிகர் தர்ஷன் பாஜகவில் இந்த வாரம் இணைய இருக்கிறார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இது பெரிய பூஸ்ட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் வெறும் டீசர்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தமிழ்நாடு போகஸ்: தற்போது அமித் ஷா போகஸ் தமிழ்நாடு பக்கம் திரும்பி உள்ளதாம். அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். இன்னும் 1 வாரத்தில் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளார். தமிழ்நாட்டில் பாஜக பிரபலம் இல்லாத சமயத்தில் கூட பாஜகவில் இருந்தவர்தான் மைத்ரேயன். 20 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இருந்து வெளியேறி இவர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் ராஜ்ய சபா எம்பி உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர் எடப்பாடி உடன் இருக்கும் மோதல் காரணமாக கட்சியில் ஓரம் கட்டப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வமுடனும் அவருக்கு நெருக்கம் இல்லை. இந்த நிலையில்தான் பாஜகவில் அவர் இணைய உள்ளார்.

பாஜக இணைப்பு: அவர் நேற்றே பாஜகவில் இணைவதாக இருந்தது. ஆனால் முக்கியமான ஒரு காரணத்திற்காக இந்த இணைப்பு தள்ளி போடப்பட்டு உள்ளது. அதன்படி அவருடன் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாஜகவில் இணைய இருக்கிறார்களாம். மாற்று கட்சி அரசியல் தலைவர்கள், ஒரு எம்எல்ஏ, இரண்டு நடிகர்கள், ஒரு பல்கலைக்கழக நிறுவனர், ஒரு ஜாதி சங்க பிரபலம் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைய இருக்கிறார்களாம். இவர்களை எல்லாம் மொத்தமாக ஒரே மேடையில் பாஜகவில் இணைய வைக்க வேண்டும் என்று இந்த நிகழ்வை தள்ளி போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications