அண்டா குண்டாக்களில் தண்ணீர் ஸ்டாக் வைங்க.. 18ம் தேதி சென்னையில் இங்கெல்லாம் மெட்ரோ வாட்டர் வராது

சென்னையில் நாளை மறுநாள் 7 இடங்களில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்ச் 18 ஆம் தேதி அன்று சென்னையில் 7 இடங்களில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை குடிநீர் வாரியம் மூலம் ராமாபுரம் விரிவான குடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

அதற்காக நீர்த் தேக்க தொட்டியின் 700 மி.மீ. அளவு கொண்ட உந்து குழாயுடன் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள (சாந்தி காலனி மற்றும் டி.எல்.எப் சந்திப்பில்) 1500மி.மீ. அளவு கொண்ட பிரதான குழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மார்ச் 18 ஆம் தேதி

மார்ச் 18 ஆம் தேதி

இதனால் மார்ச் 18-ஆம் தேதி காலை முதல் மார்ச் 19-ஆம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணாநகர். தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம் ஆலந்தூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பொதுமக்கள் தங்களுக்குவேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

குடிநீர் வாரியம்

குடிநீர் வாரியம்

மேலும் லாரிகள் மூலம் தேவையான குடிநீரை பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் எந்த வித தடையும் இன்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யபடும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர் தட்டுப்பாடு

கோடை காலத்தில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இந்த முறை நிலவுகிறதா என்பதை பார்க்க வேண்டும். இந்த முறை கோடை காலத்தில் குறைந்த நாட்களாக இருந்தாலும் நல்ல மழை பெய்ததாகவே வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இந்த கோடையை மக்கள் தண்ணீர் தட்டுப்பாடின்றி கழிக்கலாம் என்றே தெரிகிறது. மேலும் கொரோனா காலத்தால் இரு ஆண்டுகளாக வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை இருந்தது.

கொரோனா குறைந்தது

கொரோனா குறைந்தது

ஆனால் இப்போது கொரோனா குறைந்த நிலையிலும் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டதாலும் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல நேரிடும். அந்த இடங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அது போல் மக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அரசுக்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+