ஜெய்பீம்: 40 கோடி லாபத்தில் ரூ 4 கோடி ராயல்டி.. பார்வதிக்கு சேரணும்.. ஏமாத்திட்டீங்களே.. மாரிதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்பீம் படம் மூலம் சூர்யாவும் அமேசானும் 40 கோடி ரூபாய் லாபம் பார்த்த நிலையில் ஒருவரின் உண்மை கதையை எடுக்கும் போது அவருக்கான ராயல்ட்டி தொகை ரூ 4 கோடியாவது பார்வதிக்கு கொடுத்திருக்க வேண்டும் என யூடியூபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, மணிகண்டன் நடித்த ஜெய்பீம் படத்தை ஜோதிகா தயாரித்திருந்தார். ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் தீபாவளிக்கு முன்னர் ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கை போடு போடுகிறது.

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறார் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு. விசாரணைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி செங்கேணி நிறைமாத கர்ப்பிணி தனது கணவரை கண்டுபிடிக்க போராடுகிறார், அவருக்கு வழக்கறிஞரான சூர்யா உதவுகிறார். இதுதான் ஜெய்பீமின் கதை.

போலீஸார் சித்ரவதை

போலீஸார் சித்ரவதை

1993ஆம் ஆண்டு போலீஸார் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவின் வழக்கை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. ஒரு வீட்டில் காணாமல் போன 40 பவுன் நகையை ராஜாக்கண்ணு திருடிவிட்டதாக போலீஸார் விசாரணைக்கு அழைத்து செல்கிறார்கள். தனது கணவரை விடுவிக்க கோரி அவரது மனைவி பார்வதி போலீஸாரிடம் கேட்க அதற்கு அவர்களோ கணவர் தப்பி விட்டார் என பார்வதியிடம் சொல்கிறார்கள்.

கடுமை

கடுமை

போலீஸார் கடுமையாக தாக்கியதால் கணவர் தப்பி செல்ல வாய்ப்பில்லை என அறிந்த பார்வதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுக்கிறார். இந்த வழக்கு நீதிமன்றம் செல்கிறது. ராஜாக்கண்ணு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த கே சந்துரு ஆஜராகிறார். இந்த உண்மைக் கதையை மையமாக கொண்டு ஜெய்பீம் எடுக்கப்பட்டது.

கேரக்டர்கள்

கேரக்டர்கள்

சந்துரு, ராஜாக்கண்ணு ஆகியோரின் கேரக்டர்கள் அப்படியே பயன்படுத்தப்பட்ட நிலையில் ராஜாக்கண்ணுவின் மனைவியின் பெயரான பார்வதிக்கு பதில் செங்கேணி என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஏழ்மை நிலையில் வாடும் பார்வதியின் பெயரை வைத்தால் ராயல்ட்டி கொடுக்க வேண்டும் என்பதால் அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விவகாரம்

விவகாரம்

இதுகுறித்து யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரு நபரின் விவகாரத்தை அவர் அனுமதியோடு உரிமை பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தோடு படமெடுப்பர். அதை ஜெய்பீம் செய்யவில்லை. சூர்யா மற்றும் அமேசானுக்கு பல கோடி லாபம். பார்வதியின் உரிமை? ரூ 40 கோடி லாபத்தில் ரூ 4 கோடியாது பார்வதிக்கு உரிமை உண்டு தானே!

Recommended Video

    மலைவாழ் மக்களுக்கு JaiBhim படத்தை திரையிட்டு காட்டிய Surya Fans | Oneindia Tamil
    சண்டை

    சண்டை

    "சட்ட விவரமறியாத, சண்டை போட சக்தியில்லாத மக்களை யாரும் ஏமாற்றலாம்"! என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நேற்று முன் தினம் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியின் பெயரில் ரூ 10 லட்சம் வைப்புத் தொகை செலுத்தியுள்ளார். இதன் மூலம் வரும் வட்டி தொகையை பார்வதி இருக்கும் வரை செலவிடலாம் என்றும் அவரது காலத்திற்கு பிறகு அந்த பணத்தை வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+