10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்.. தமிழக அரசு
சென்னை: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்குகிறது. அது போல் மே 6 முதல் பத்தாம் வகுப்புகளுக்கும் மே 10 ஆம் தேதி 11 ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடைபெறுகிறது.
பொதுவாக இந்த பொதுத் தேர்வுகள் மார்ச் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்துவிடும். ஆனால் கொரோனாவால் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பொதுத் தேர்வுகளும் தாமதமாக அறிவிக்கப்பட்டன.

கொரோனா பரவலுக்கு பிறகு முதல் முறையாக பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை தேர்வுத் துறை பின்பற்றி வருகிறது. இதனிடையே பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் முகக் கவசம் அணிய வேண்டுமா என்ற குழப்பம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது.
இவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியுடன் தேர்வு நடத்தப்பட்டாலும் முகக் கவசம் அவசியம்.
மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications