அசத்திப்புட்டாரே கணேசன்.. ஜஸ்ட் 24 மணி நேரத்தில் நிறுவன பதிவு சான்றிதழ்.. தமிழ்நாடு அரசு அதிரடி
சென்னை: நிறுவனங்கள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் நிறுவன பதிவு சான்றிதழை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிட்டு, அமைச்சர்கள் உரையாற்றியும், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

10 அல்லது அதற்கு மேற்பட்ட வேலை ஆட்கள் பணிபுரிகின்ற நிறுவனம் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் உரிமையாளருக்கு பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்ட முன் வடிவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* வணிகம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவுக்காக விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
* வணிகம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவுக்காக விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
* விண்ணப்பித்த நபருக்கு 24 மணி நேரத்துக்குள் பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும்.
* பதிவு சான்றிதழ் ஆனது நிறுவனத்தின் முக்கியமான இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும்.

* விண்ணப்ப படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மாற்றம் செய்திருந்தால் 30 நாட்களுக்குள் தொழில்துறை ஆய்வாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* திருத்தம் செய்யப்பட்டதற்கான புதிய பதிவுச் சான்றிதழை பெற வேண்டும்.
* 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் வேலை நேரம், வார ஓய்வு, விடுமுறைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய வேலை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications