Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூள் கிளப்பும் திமுக அரசு.. சத்துமாவு வரப்போகிறதாமே.. நாசர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. செம்ம!

ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என நாசர் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்..

பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், சில துறைகள் அவ்வளவாக மக்களிடம் பேசப்படுவதில்லை.. அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் இருந்தே இப்படித்தான் இருந்து வந்துள்ளது.

ஆனால், இன்று மாநிலத்தை ஆண்டு வரும் திமுக அப்படி இல்லை.. ஒவ்வொரு துறையிலும் தனித்தன்மையை பதிப்பித்து வருகிறது.

லிஸ்ட்

லிஸ்ட்

இதற்கு முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்பதை மறுக்க முடியாது.. துறை ரீதியாக, புதுபுது திட்டங்கள் தீட்டப்பட்டு, அதன்படி அந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.. அந்தவகையில், பால்வளமும் இந்த லிஸ்ட்டில் இணைகிறது.. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்தில் ஊழல், முறைடுகள் என ஒவ்வொரு புகார்களையும் திமுக அரசு பகிரங்கப்படுத்தி, அது தொடர்பான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுத்து வந்தாலும், இன்னொரு பக்கம் தமிழக மக்களுக்காக சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

பிளாண்ட்

பிளாண்ட்

அந்தவகையில், நேற்றுகூட அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்யவிருப்பதாக தெரிவித்தார். ஆவின் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் தண்ணீர் சுத்திகரிப்பு பிளாண்ட் உள்ளதாகவும், இங்கிருந்து குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்..

 தண்ணீர் பாட்டில்கள்

தண்ணீர் பாட்டில்கள்

மேலும், 1 லிட்டர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும், தண்ணீர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடந்து வருவதாகவும் கூறினார். அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஆவின் பால் பாக்கெட்டுகளில் செய்யப்பட்டு வரும் விளம்பரங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன... இதனை பார்த்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலரும், பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களாம்..

Recommended Video

    Aavin பாலில் ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம் ஊழல்! - Jayakumar
    சத்துமாவு

    சத்துமாவு

    இதனால் ஆவின் வருவாயை அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார்கள்.. இதன் மூலமும் ஆவின் நிறுவனத்தின் வருவாய் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் ஒரு அறிவிப்பை நாசர் வெளியிட்டுள்ளார்.. ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என்றும், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவின் மையங்கள் மூலம் ஆவின் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் நாசர் உறுதி கூறியுள்ளார்.. தினம் தினம் ஒவ்வொரு அறிவிப்புகளை, பால்வளத்துறை வெளியிட்டு வருவது மக்களின் வயிற்றில் பாலை வார்த்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+