அடுத்த மாஸ்.. முதல்வர் ஸ்டாலின் 2வது நாள் பயணமாக இன்று அரியலூர் செல்கிறார்.. ரெடியாகும் புது திட்டம்
முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று அரியலூர் மாவட்டம் செல்கிறார்
சென்னை: 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 2வது நாளான இன்று அரியலூர் மாவட்டம் செல்கிறார்.. அங்கு ஏராளமான நலத்திட்ட பணிகளையும் துவக்கி வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.. இதற்காக நேற்றைய தினம், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்தார்.
பிறகு, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வானவில் மன்றம்
இதையடுத்து, நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்... பின்னர், அரசுப்பள்ளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்..

அகழ்வாராய்ச்சி
இந்நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு முதல்வர் புறப்பட்டு சென்றார்.. அங்கு வேப்பந்தட்டை தாலுகா எறையூரில், சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை சென்ற முதல்வர், அங்கு அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. பின்னர், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை திறந்துவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்கு அமையவுள்ள தனியார் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்...

புது புது திட்டங்கள்
இந்நிலையில், சுற்றுப்பயணத்தில் 2வது நாளாக, இன்று அரியலூர் மாவட்டம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. இன்று காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.. புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்..

ட்ரோன்ஸ்
அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காலை 10.45 மணியளவில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைகிறார். மதியம் 12.30 மணிக்கு செல்லும் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார் ஸ்டாலின்... முன்னதாக, முதல்வரின் இந்த வருகையையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் என 2 நாட்களுக்கும் ட்ரோன்கள் பறக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications