ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் தந்த வணிக மாற்றம்! முடி மாற்றம் ஆசையில் ஊசலாடும் உயிர்கள்! மத்திய அரசு அதிரடி
சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவலைப்பட வைக்கும் ஒரு விஷயம் தலைமுடி உதிர்வதுதான்.. கொஞ்சம் முடி கொட்ட துவங்கினாலே எங்கே வழுக்கை விழுந்துவிடுமோ? என்ற கிலியும் சேர்ந்து ஒட்டி கொள்கிறது.. அதனால்தான் இந்த பயத்தில், பலரும் 'முடி மாற்று சிகிச்சை அதாவது ஹேர் டிரான்ஸ்பிளாண்டு செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.. ஆனால் சிக்கல் என்னவென்றால் முடிக்காக, உயிரையே இழக்கும் சூழலும் வந்துவிடுகிறது.. இந்த விவகாரத்தைதான் மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் இளம் வயது வழுக்கைகள் அதிகமாகிவிடுவதால், ஹேர் டிரான்ஸ்பிளாண்டு செய்வதும் அதிகமாகிவிட்டது.. குறிப்பாக நகரங்களில், 25 முதல் 45 வயதிலுள்ள ஆண்கள் இதற்காக ஆர்வம் காட்டுகிறார்கள்.. சில பெண்களும்கூட இதனை செய்து கொள்கிறார்கள்.. இவர்களின் "வழுக்கை" பயத்தையும், பலவீனத்தையும் பயன்படுத்தி கொண்டு, சில கிளினிக்குகள், சில சலூன்கள்கூட, ஹேர் டிரான்ஸ்பிளாண்டு செய்ய ஆரம்பித்து, கல்லா கட்ட துவங்கிவிட்டன.

இதில் சில இடங்களில் அனுபவமற்றவர்கள், சில நேரங்களில் தகுதி இல்லாதவர்கள் கூட இந்த சிகிச்சையை செய்ய முயற்சிக்கிறார்கள்.. இது வாடிக்கையாளர்களை கடுமையாக பாதிக்கிறது.. சில நேரங்களில் மிக மோசமாக விளைவுகளை தந்துவிடுகிறது.. சிலசமயம் உயிரிழப்பு வரை போகிறது..
உயிரிழப்பு நினைவிருக்கா
சென்னையில் கடந்த 2016ல் மருத்துவ மாணவர் ஒருவரும், சமீபத்தில் டெல்லியில் ஒரு இளைஞரும் முறையற்ற ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் செய்து இறந்தது நினைவிருக்கலாம். இதற்கு பிறகுதான் கோர்ட் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு அரசை முறைப்படுத்த சொன்னது. உடனே நம்முடைய மத்திய அரசும் கடந்த ஆண்டு இதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன. ஆனாலும் சில இடங்களில் இதை பின்பற்றவில்லை.
இதன்விளைவு, அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவமனைகளில் முறையான பயிற்சி பெறாத நபர்களால் செய்யப்படும் சிகிச்சையால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.. எனவேதான் மீண்டும் ஒரு கடிவாளத்தை மத்திய அரசு தற்போது போட்டுள்ளது.. தேசிய மருத்துவ ஆணையம், முடி மாற்று சிகிச்சை தொடர்பாக அதிரடியான புதிய வழிகாட்டுதல்களையும் மீண்டும் இப்போது வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கடிவாளம்
ஹேர் டிரான்ஸ்பிளாண்டு சாதாரண அழகு செய்யும் வேலை கிடையாது.. இது மருத்துவ செயல்முறை என்பதால் அனுமதி பெற்ற டாக்டர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது..
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்படி, இனி யார் வேண்டுமானாலும் முடி மாற்று சிகிச்சை செய்துவிட முடியாது.. எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்கள் கூட, இந்த சிகிச்சையில் முறையான கூடுதல் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருந்தால் மட்டுமே சிகிச்சையை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்... தோல் ஸ்பெஷலிஸ்ட்டுகள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே இந்த சிகிச்சையை செய்ய தகுதியானவர்கள் என்று ஆணையம் கறாராகத் தெரிவித்துள்ளது.
ஊசி, ஆபரேஷன், ஐசியு வசதி
பல கிளினிக்குகளில் டாக்டர்களக்கு பதிலாக உதவியாளர்களும், டெக்னீஷியன்களும் இந்த ஹேர் டிரான்ஸ்பிளான்டு செய்கிறார்களாம்.. இதுபோன்ற புகார்களும் அதிகமாக வந்துள்ளது.. இனி இதுபோன்று நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... ஒருவேளை உதவியாளர்கள் இருந்தால், அவர்கள் தகுதியான டாக்டரின் நேரடி மேற்பார்வையில் மட்டுமே இருக்க வேண்டும். டாக்டர் இல்லாமல் உதவியாளர்கள் ஊசி போடுவதோ அல்லது ஆபரேஷன் செய்வதோ சட்டப்படி குற்றமாகும்.
அதேபோல இப்படியான சிகிச்சையைச் செய்யும் கிளினிக்குகள் ஒரு சிறிய மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் இருக்க வேண்டும்.. அதாவது திடீரென நோயாளிக்கு மயக்கம் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவரை காப்பாற்றக்கூடிய ஐசியூ வசதிகள் கொண்ட கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
ஏமாந்து உயிரை பணயம் வைக்காதீங்க
இப்படியான அறிவுறுத்தல் பொதுமக்களுக்கும் தரப்பட்டுள்ளது.. அதாவது கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்துவிட வேண்டாம் , குறைந்த விலையில் ஹேர் டிரான்ஸ்பிளாண்டு செய்கிறோம் என்று சொல்வதை கேட்டு ஏமாற வேண்டும், உயிரை பணயம் வைக்கவும் வேண்டாம். சிகிச்சை எடுப்பதற்கு முன்பு, அந்த டாக்டர் தகுதியானவரா? அங்கு முறையான வசதிகள் இருக்கிறதா? என்பதை மக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஏனென்றால், முடி மாற்று சிகிச்சை என்பது வெறும் முடி நடும் வேலை மட்டுமல்ல, அது கிட்டத்தட்ட ஒரு ஆபரேஷன் போன்றது.. மயக்க மருந்து தந்துதான் இதை செய்வார்கள்.. அப்படி மயக்க மருந்து தரும்போது எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும்.. எனவேதான், மயக்க மருந்து நிபுணர்கள் அல்லது அந்த ஆபத்தை கையாளத் தெரிந்த மருத்துவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என விதிமுறை சொல்கிறது..
இந்தியா மானமே போய்விடும்
இங்கு இன்னொன்றையும் நாம் குறிப்பிட வேண்டி உள்ளது.. இந்தியாவில் முடி மாற்று சிகிச்சை என்பது சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மிகப்பெரிய தொழில் துறையாக வளர்ந்து வருகிறது. மிகக் குறைந்த செலவில் இந்தியாவில் இந்த சிகிச்சை செய்யப்படுவதால், வெளிநாடுகளில் இருந்தும்கூட நிறைய பேர் இந்தியாவுக்கு வருகிறார்களாம்.. அப்படி வெளிநாட்டினரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டால், அதுவும் இந்தியாவைதான் பாதிக்கும் .. அதனால்தான் மத்திய அரசு இதில் பெருத்த ஆர்வத்தையும், கவனத்தையும் காட்டி உள்ளது..
ஆகமொத்தம், இதுவரை முறைப்படுத்தப்படாமல் இருந்த இந்த முடி மாற்று சிகிச்சைத் துறை, இப்போது அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது... இதன் மூலம் போலி மருத்துவர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, மக்களின் உயிர் காக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications