வேற சாய்சே இல்லை.. கிளியராக சொன்ன மோடி.. எடப்பாடியை "ஒதுக்கிய" அமித் ஷா.. அடடே ஓபிஎஸ்ஸுக்கு வெற்றி!
சென்னை: நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்ட சம்பவம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு அதிமுகவில் இருக்கும் இரண்டு பிரிவினருக்கும் கொடுக்கப்பட்ட முக்கியமான மெசேஜாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி நேற்று முதல்நாள் திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் மறுநாளே உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பின்னர் பாஜக தலைவர்களுடன் கமலாலயத்தில் ஆலோசனையும் மேற்கொண்டார். இந்த இரண்டு நிகழ்விலும் முக்கியமான சில சம்பவங்கள் நடைபெற்றன. அந்த சம்பவங்கள் தற்போது அதிமுக தரப்பில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. அவை என்ன சம்பவங்கள்?

சம்பவம் 1
அதன்படி பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வரவேற்க மற்றும் தனியாக சந்திக்க ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தனி தனியாக நேரம் கேட்டு இருந்தனர். இதில் ஒருவருக்கு வரவேற்க நேரமும், இன்னொருவருக்கு விடைகொடுக்க நேரமும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம் இரண்டு பேருக்குமே தனியாக சந்திக்க நேரம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு பேருக்குமே தனியாக சந்திக்க நேரம் தரப்படவில்லை.

தனி சந்திப்பு
ஆனால் இரண்டு பேருக்குமே அதிசயமாக வரவேற்க மற்றும் விடை கொடுக்க நேரம் தரப்பட்டது. இதில்தான் மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது இரண்டு பேருமே வாருங்கள் என்று தகவல் சென்றுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இரண்டு பேருமே ஒன்றாக விமான நிலையம் வர போவது, இரண்டு பேருக்குமே கடைசி கட்டம் வரை தெரியாது என்கிறார்கள். விமான நிலையத்தை நெருங்கிய பின்புதான் எடப்பாடி வருகிறார் என்று ஓ பன்னீர்செல்வத்திற்கும், ஓ பன்னீர்செல்வம் வருகிறார் என்று எடப்பாடிக்கும் தெரிய வந்துள்ளது.

சந்தித்தார்
விமான நிலையத்தில் வரவேற்கும் போதும், விடைகொடுக்கும் போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்தை மோடி ஒன்றாக சந்தித்தார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து லைனில் நிற்க வைக்கப்பட்டனர். கொஞ்சம் தூரத்தில் இருந்த இவர்களை ஒன்றாக வாருங்கள் என்று மோடி அழைத்து இருக்கிறார். இங்கே வாருங்கள் என்று கூப்பிட்டு அவர்களிடம் பேசி இருக்கிறார். அதன்பின் அவர்களிடம் இருந்து பூக்களை வாங்கி உள்ளார்.

சம்பவம் 2
அதன்பின்தான் நேற்று சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டார். இதில் அமித் ஷாவை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். ஆனால் தனியாக மீட்டிங் நடத்த நேரம் கொடுக்கப்படவில்லை. மாறாக அழைப்பு விடுக்க மட்டும் நேரம் கொடுக்கப்பட்டது. இது ஒரு அடையாள சந்திப்பு. அதாவது ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க நான் ரெடி என்பது போல நடத்தப்பட்ட அடையாள சந்திப்பு இது.

இரண்டு சம்பவங்கள்
எடப்பாடி இதேபோல் சந்திக்க நேரம் கேட்டு, அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களும் அதிமுகவிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். அதன்படி, அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு இவர்கள் ஆதரவு தரவில்லை. இரண்டு தலைவர்களுமே வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதனால்தான் இரண்டு பேரையும் மோடி ஒன்றாக சந்தித்தார்.

சந்திப்பு
இரண்டு பேரும் ஒன்றாக வாருங்கள் என்று சொன்னதன் மூலம் மோடி கிளியராக இரண்டு பேரும் தனக்கு முக்கியம் என்பதை சொல்லிவிட்டார். அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு இடமில்லை. இரண்டு பேரும் இணைவதை விட வேறு சாய்சே இல்லை என்பதை பாஜக மேலிடம் சொல்லிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதோடு, ஒற்றை தலைமை கோரும் எடப்பாடியை சந்திக்காமல் ஓ பன்னீர்செல்வத்தை அமித் ஷா சந்தித்ததற்கும் இதுதான் அர்த்தம். அதிமுகவில் ஒற்றை தலைமையை பாஜக விரும்பவில்லை என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
நாகர்கோவிலில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. வழிநெடுக பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications