சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்ம "பிள்ளையார்பட்டி"யில் மோடியா.. "பிளான் பண்ணுங்க".. ஆஹா.. பறந்த மேலிட உத்தரவு.. இது எப்போ...?

பிள்ளையார்பட்டி கோயில் குறித்து சிலாகித்து பேசினாராம் ஜேபி நட்டா

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. என்னவாம்?பாஜக தேசியத் தலைவர் நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார் இல்லையா? இந்த பயணமானது, தமிழக அரசியலில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி வாயை கொடுத்து நட்டா, நெட்டிசன்களிடம் எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டாலும், அவரது வருகை, அதிமுக & பாஜக என 2 கட்சிகளுக்கும் பெருத்த நம்பிக்கையை உண்டுபண்ணி உள்ளது.

அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கைஅடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

நட்டா

நட்டா

அதிமுகவின் விஜயபாஸ்கர், நட்டாவை சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.. ஏகப்பட்ட வழக்கில் சிக்கி விழித்து கொண்டிருக்கும் விஜயபாஸ்கர், நட்டாவை சந்தித்து சில முக்கிய விஷயங்களை ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.. இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் தராத பட்சத்தில், விஜயபாஸ்கரை வைத்து நட்டா மூலம் காய்நகர்த்த சொன்னதாகவும் கூறப்படுகிறது.. அதாவது நட்டா மூலம், மோடியை சந்திக்க எடப்பாடி டீம் முயன்றுள்ளதாக தெரிகிறது.

 ஃபைல்கள் சீக்ரெட்

ஃபைல்கள் சீக்ரெட்

இதற்கு நடுவில் திமுக மீது, பக்கம் பக்கமாக புகார்களை நட்டாவிடம் தந்துள்ளதாம் பாஜக டீம்.. அந்த ரகசிய ஃபைல்களில், ஊழலில் சிக்கிய சில திமுக அமைச்சர்கள் பற்றின விஷயங்கள் இருப்பதாகவும், அதைவைத்து திமுக தரப்புக்கு நெருக்கடி தர வேண்டும் என்று நட்டாவிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.. ஆக, பாஜக + அதிமுக என இரு தரப்புமே நட்டாவின் தமிழக வருகையை மிக சரியாக பயன்படுத்தி கொண்டுவிட்டனர் என்றே சொல்லலாம்.

 ராமலிங்கம்

ராமலிங்கம்

இப்படி அரசியல் ரீதியான அதிர்வுகள் ஒரு பக்கம் ஏற்பட்டுள்ளது என்றால், பாஜக மேலிடத்தையே ஆச்சரியத்தில் அதிர செய்ததாம் பிள்ளையார்பட்டி.. சிவகங்கை மற்றும் மதுரையில் ஏகப்பட்ட பிளான்களை வைத்து கொண்டு வந்திருந்தார் நட்டா.. பட்டியலினத்தை சேர்ந்த சாக்கோட்டை தெற்கு ஒன்றிய மண்டல பாஜக தலைவர் ராமலிங்கம் வீட்டில் காலை உணவு சாப்பிட்டார்.. மாநில நிர்வாகிகளுடன் தரையில் உட்கார்ந்து வாழை இலையில் அவருக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது.

 பிள்ளையார்பட்டி

பிள்ளையார்பட்டி

முன்னதாக, செட்டிநாட்டு பகுதியில் உள்ள சில சுற்றுலா தலங்களையும் கண்டுகளித்துள்ளார் நட்டா.. அதற்கு பிறகுதான் பிள்ளையார்பட்டிக்கு வந்துள்ளார்.. திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.. அவருக்கு பாஜக சார்பிலும், கோயில் நிர்வாகம் சார்பிலும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு தரப்பட்டது.. அவருடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் என எல்லாருமே பிள்ளையார்பட்டி கோயிலுக்கு சென்றிருக்கிறார்கள்.

பிளான்

பிளான்

பிள்ளையார்பட்டி விநாயகரை பிரம்மிப்புடன் பார்த்து கொண்டே நின்றாராம் நட்டா.. பிறகு அருகில் இருந்த பாஜக நிர்வாகிகளிடம், மும்பையில் இருக்கும் சித்தி விநாயகர், எந்தளவுக்கு வடமாநிலத்தில் பிரபலமோ, அதே அளவுக்கு இந்த பிள்ளையார்பட்டி விநாயகரும் அங்கே பிரபலம்... நிறைய இடங்களில் இந்த விநாயகர் படத்தை பார்த்திருக்கிறேன் என்று சொல்லி வியந்தாராம்.. அதுமட்டுமல்ல, இந்தக் கோயிலுக்கு மோடி ஜி வந்திருக்கிறாரா? என்று அங்கிருந்தோரிடம் கேட்டாராம். அதற்கு இல்லை என்று அவர்கள் சொல்லவும், தேர்தலுக்கு முன்பு ஒருமுறை மோடிஜியை அழைத்து வர வேண்டும், பிளான் போடுவோம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாராம்..

 4 கை + 2 கை

4 கை + 2 கை

இந்த கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும்... காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி ஊரில் அமைந்துள்ளதால், அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், இங்குள்ள விநாயகர், பிற இடங்களில் காணப்படுவதைப்போல 4 கைகளுடன் இல்லாமல், 2 கைகளுடன் காணப்படுவதுதான்.. இந்த பிள்ளையாரை வடமாநிலங்களில் பல இடங்களில் பார்த்ததாக சொல்லியதுடன், பிரதமரையும் அழைத்து கொண்டு வருவதாக போயுள்ளார்.. ஆக, நம்ம பிள்ளையார்பட்டி புகழ் டெல்லிவரை பறந்துள்ளது.. செம..!

English summary
Master plan and BJP national president JB Nadda visits pillaiyarpatti vinayagar temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X