"மூன்று முடிச்சு".. ராஜதந்திர எடப்பாடி.. "சீக்கிரமே முடிஞ்சிடுங்க".. பேனரில் அவர் போட்டோ வேற.. ஓஹோஹோ
அதிமுக வேட்பாளர் தென்னரசு தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்
சென்னை: மொத்தம் 3 விதமான பிளான்களுடன், எடப்பாடி பழனிசாமி களமிறங்கி உள்ளாராம்.. அந்தவகையில் நாளை முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் பிரச்சாரத்தை துவக்க உள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பு கூடி வருகிறது.
ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.. இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக அரசை சரமாரியாக விமர்சித்தார்.
நிச்சயமாக, இந்த ஆட்சி சீக்கிரமே முடிந்துவிடும்.. அதுக்கு முன்னோட்டமாகத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி அமைய போகிறது.. பணத்தை வைத்து ஓட்டு வாங்க நினைக்கறாங்க..

கனெக்ஷன் தரல
பூத் வாரியாக 200 - 300 பேரை தினமும் கூட்டிட்டு வர்றாங்க.. அவர்களை அடைத்து வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை இது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அதிமுக ஆட்சியில் 484 கோடி ரூபாயில் ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி சோதனை ஓட்டம் நடத்தினோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இன்னும் வீடுகளுக்கு தண்ணீருக்கு கனெக்ஷனே தரவில்லை.. கூட்டணியில் உள்ள கட்சிகள் சொத்து வரி உயர்வு குறித்து எதிர்த்து பேசவில்லை... எங்க பார்த்தாலும் போதைப் பொருள் நடமாட்டம்.. கூட்டணி கட்சிகள் அதையும் கண்டிக்கவில்ல.. மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது... அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கல..

பச்சை பொய்
8 வழிச்சாலையை கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தினாங்களே, இன்னைக்கு பிளாஸ்திரியை வாயில் ஒட்டிட்டு இருக்காங்க. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னாங்களே? 38 எம்பிக்கள் இங்கிருந்து டெல்லி போனாங்களே? என்ன ஆச்சு? யாராவது குரல் தந்தாங்களா? திமுக முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னாங்களே? இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? பெட்ரோல் டீசல் விலையை மற்ற மாநிலங்கள் குறைத்தும், ஏன் தமிழ்நாட்டில் குறைக்கவில்லை? தேர்தல் அறிவிப்பில் சொன்னதை 85 சதவிகிதம் நிறைவேற்றி விட்டதாக திமுக பச்சை பொய்யை சொல்கிறது" என்று ஒவ்வொரு விஷயமாக புட்டு புட்டு வைத்தார்.

ஷார்ப் எடப்பாடி
இந்நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் செய்ய போகிறார்.. அதன்படி, எடப்பாடி பழனிசாமி நாளை அதாவது 15ம் தேதி தன்னுடைய முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்... மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதி, பெரியார் நகர் பகுதிகளில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து வீரப்பம்பாளையம், வெட்டுகாட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகில், கலெக்டர் அலுவலகம், சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

லிஸ்ட் ரெடி
அதேபோல, பின்னர் வீரப்பன்சத்திரம் பகுதியில் தன்னுடைய முதல் நாள் பிரசாரத்தை முடித்து கொள்கிறார்.. மறுபடியும், வரும் 16, 17-ந்தேதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்... பிறகு, 2-வது கட்ட பிரச்சாரத்தை அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.. அதிமுக தலைவர்களுடன் பாஜகவினரும் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த முறை 3 விஷயங்களை நோக்கி இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார்.

3 பாயிண்ட்ஸ்
முதலாவதாக, ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் வலுவாக உள்ள நிலையில், மேலும் அதிகப்படியான வாக்கு வங்கியை பெற்றுவிடுவது, எம்பி தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறார். அடுத்ததாக, அதிமுகவுக்கு ஒரே தலைவர் தான் மட்டுமே என்பதுடன், நிரந்தர பொதுச்செயலாளர் என்ற புள்ளியை நோக்கி நகரவும் இந்த வாக்கு வங்கியானது உதவும் என்று கணக்கு போடுகிறார். மூன்றாவதாக, ஓபிஎஸ்ஸின் மிச்சமுள்ள குடைச்சலுக்கும், ஒரு முடிவுக்கட்ட இந்த இடைத்தேர்தலை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் யோசிக்கிறாராம். அதனாலேயே, எடப்பாடியின் பிரச்சார வியூகம் இந்த முறை புதுமாதிரியாக இருக்க போகிறது என்கிறார்கள்.

கூடாரம் அதிர்ந்தது
எனவே நாளை முதல், ஈரோட்டில் பிரச்சாரத்தின் அனல் அதிகரிக்க போவதாக சொல்கிறார்கள்.. இதனிடையே, அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது... பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது, கூட்டணி பெயரை டக்கென மாற்றியது பெரும் சர்ச்சையாகியிருந்தது.. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் பேனரை வைத்தார்கள்.. இந்த விஷயம் டெல்லி வரை பறந்தது.. பாஜக கூடாரமே அதிர்ந்து போனது.. பிறகு, அடுத்த நாள் காலை அந்த பேனரை அகற்றிவிட்டு, "அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்" என்று மாற்றினார்கள்..

வாசன் கிருஷ்ணசாமி
இப்படியே அடுத்தடுத்த 4 பேனர்கள் மாறின.. இந்த 4 பேனர்களிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய போட்டோக்களும் கூட்டணி கட்சி என்ற முறையில் தமாகா வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரின் சின்ன சைஸ் போட்டோக்களும் இடம் பெற்றிருந்தன.. ஆனால், பாஜக தலைவர்கள் ஒருத்தர் போட்டோகூட அதில் இடம்பெறவில்லை.. அத்துடன் பாஜகவுக்கு ஆதரவு தந்த கூட்டணி கட்சி தலைவர்களின் போட்டோக்களும் அதில் காணப்படவில்லை.

ஐக்கியம்
இப்போது விஷயம் என்னவென்றால், மீண்டும் 5-வது முறையாக புதிதாக பிளக்ஸ் பேனர் மாற்றி வைத்துள்ளனர். அதில் 'அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர்' என்று பெயரை மாற்றி பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர் படம் என அனைத்துமே ஐக்கியமாகி விட்டது.. 2 நாளைக்கு முன்புதான், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இந்த முறை மட்டுமல்ல, வரப்போகும் எம்பி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?











Click it and Unblock the Notifications