Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெளுக்குதே சாயம்".. எடப்பாடியின் பவர்.. பழனிசாமி "பச்சை துரோகம்"..சீறும் லீடர்கள்.. கவனிக்கும் பாஜக

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி தரும்விதமாக, ஓபிஎஸ் தன்னுடைய அரசியலை வேகப்படுத்தி வருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ்ஸின் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுக்கும் அடியெடுத்து வைத்துள்ளது.. இதையடுத்து, எடப்பாடி தரப்பும், பாஜக தரப்பும் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக பாஜக முயன்று முயன்று தோற்று வரும்நிலையில், பெருவாரியான ஆதரவு இருக்கும் பக்கமே நிற்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனவே, ஓபிஎஸ்ஸை எந்த அளவுக்கு பயன்படுத்தி கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, நாம் ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அச்சாணி

அச்சாணி

அதாவது, சுப்ரீம்கோர்ட்டில் அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததுமே, சசிகலாவிடமும் தினகரனிடமும் போனை போட்டு பேசினாராம் ஓபிஎஸ்.. அப்போது சசிகலா ஓபிஎஸ்ஸிடம், "டெல்லியிலும் நீதிமன்ற வளாகத்திலும் அசைக்க முடியாத லாபியை பழனிச்சாமி (எடப்பாடி) வைத்திருக்கிறார். உங்களால் ஏன் அப்படி ஒரு லாபியை வைக்க முடியவில்லை? உங்களிடம் நான் பேசும்போதெல்லாம், 'பாஜக தலைவர்களிடம் நினைத்த நேரத்தில் பேசுவதற்கு நல்ல சோர்ஸை வைத்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னீங்களே, ஆனால், உங்க நம்பிக்கை தப்பாபோய்டுச்சே, உங்களுக்கு சரியான சோர்ஸ் இல்லையா?" என்று கேட்டாராம் சசிகலா.

 அசையும் ஆணி

அசையும் ஆணி

அதற்கு, ஓபிஎஸ், "பாஜக தலைமையை ரொம்பவும் நம்பினேன். கைவிட்டுட்டாங்க" என்று ஆதங்கப்பட்டாராம்.. அதுமட்டுமல்ல, பாஜக போட்டியிட்டார், நாங்கள் எங்கள் வேட்பாளரை விலக்கி கொள்ள தயார் என்று ஒரு கட்சி தலைவர் சொல்லலாமா? என்ற விமர்சனங்களும் ஓபிஎஸ் மீது பாய்ந்தது.. இப்படி அளவுக்கு அதிகமாக பாஜகவையே நம்பிய நிலையில், இடைத்தேர்தல் சமயத்தில்தான் உச்சக்கட்ட அதிருப்திக்கும் ஆளானாராம் ஓபிஎஸ்.. கடந்த சில நாட்களாகவே, தங்கள் அணியில் இருந்து ஒவ்வொருவராக எடப்பாடி பக்கம் சென்று கொண்டிருப்பதால், இதுவும் டெல்லி பாஜகவுக்கு தர்மசங்கடத்தை தந்ததாக சொல்கிறார்கள்..

 பண்ருட்டியார்

பண்ருட்டியார்

பாஜகவையே நம்பிக் கொண்டிருந்தால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதால்தான், மூத்த தலைவரான பண்ருட்டியார் இந்த விஷயத்தை உடனடியாக கையில் எடுத்தார். இடைத்தேர்தல் ரிசல்ட் தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களை சந்திக்க போகிறோம்.. மக்கள் மன்றத்தை நாட போகிறோம்" என்று கூறியிருந்தார்.. காரணம், ஓபிஎஸ் தன் பலத்தையும், செல்வாக்கையும் அதிமுக தொண்டர்களிடம் மட்டுமல்ல, டெல்லி பாஜகவிடமும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளதாகவே தெரிகிறது.. இதற்கு பிறகுதான், ஆர்ப்பாட்டங்கள் குறித்த அடுத்தடுத்த ஓபிஎஸ் தரப்பில் இருந்து வெளியானது..

 காசு வெட்டி

காசு வெட்டி

சிவகங்கையில் அதற்கான முதல் மணி அடிக்கப்பட்டது.. மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மருது அழகுராஜ், திறம்பட இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி காட்டியிருந்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசியிருந்த மருது அழகுராஜ், சாபம் விடுத்து பேசியிருந்தது பலரையும் கவனிக்க வைத்தது.. "மதுரை ஏர்போர்ட்டில் ஆவேசமாக சீறியது அதிமுக தொண்டன் கிடையாது.. பழனிசாமி முகத்தை பார்த்த உடனேயே இதுமாதிரி கோபங்கள் வருகிறது... வயிறெரிச்சலோடு சொல்கிறோம். இங்கு வந்த கூட்டம் எல்லாம் கொல்லங்குடி காளியம்மன் கோயிலுக்கு சென்று காசை வெட்டி போட்டுவிட்டுத்தான் போவோம்... சசிகலா அவர்கள் நல்லவரோ, கெட்டவரோ எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள், அவரை நாய் என்றும் தினகரனுக்கு இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று சொன்னார்..

 கொல்லங்குடி காளியம்மன்

கொல்லங்குடி காளியம்மன்

ஓபிஎஸ் காலை சுற்றி வந்துவிட்டு இப்போது ஆட்சி போனதுடன் ஓபிஎஸை ஒழிக என சொல்கிறார்... இந்த நன்றி கெட்ட மனிதருக்கு நல்லது செய்யும் வரிசையில் தற்போது அண்ணாமலை கவுண்டரும் இணைந்துள்ளார்... ஒருவேளை இவர் நமது இனத்தை சேர்ந்தவர் அவர் நமக்கு உண்மையாக இருப்பார் என்று நினைக்கலாம்.. துரோகத்திற்கு இனம் கிடையாது. எடப்பாடியை பொறுத்தவரை துரோகத்தில் ஊறி இருக்கும் நச்சுப்பாம்பு" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.. வழக்கமாக, கடும் விமர்சனங்களை வைத்தாலும், கோப வார்த்தைகளை பயன்படுத்தாத மருது அழகுராஜ், வயிறெரிந்து சாபமே விட்டது, எடப்பாடி டீம் மீதான கோபத்தை வெளிப்படுத்தியது.

 ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

இதோ இன்றைய தினமும், சென்னையில் எடப்பாடிக்கு எதிரான போராட்டத்தை ஓபிஎஸ் தரப்பு நடத்தி காட்டி உள்ளது.. இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் எடப்பாடியை விமர்சிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, பட்டாசாக பொறிந்து தள்ளிவிட்டார்.

 ஸ்பீடு எடப்பாடி

ஸ்பீடு எடப்பாடி

"ஓபிஎஸ் கட்சிக்கு எந்தவிதமான துரோகமும் செய்யவில்லை. துரோகம் செய்தது எடப்பாடி தான். அவர் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.. அதனால் அவர் பதவி விலக வேண்டும். சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத ஜெயக்குமார் போன்றவர்கள் எல்லாம் ஓபிஎஸ்ஸை விமர்சிக்க தகுதியே கிடையாது. உரிய நேரத்தில் தக்கப் பதிலடி அவருக்கு கொடுப்போம்'' என்று ஆவேசமாக கூறியுள்ளார்... "அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்" என்று எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வரும்நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

ஹோப் + டீலிங்

ஹோப் + டீலிங்

ஆனால், எடப்பாடியோ, பொதுச்செயலாளர் தேர்தல் வேலையில் மும்முரமாகிவிட்டாராம்.. முதற்கட்டமாக அதிமுக தொண்டர்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோவுடன் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவும் பொறிக்கப்பட்டு அடையாள உரிமை சீட்டு என புதிதாக வழங்கப்பட்டு வருகிறது. முன்பகுதியில் உறுப்பினர் உரிமை சீட்டு மற்றும் அமைதி, வளம், வளர்ச்சி என்றும், பின்பகுதியில் அதிமுக உறுப்பினர் பெயர், வார்டு எண், பகுதி, மாவட்டம், வயது, பாலினம், வரிசை எண், சேர்ந்த ஆண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. "இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி" என்ற கையொப்பமும் இடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள உரிமை சீட்டு இருந்தால்தான் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓட்டு போட உரிமை உண்டு என்கிறார்கள்.. இதைவிநியோகிக்கும் பணியும் ஆரம்பமாகிவிட்ட நிலையில், இது தொடர்பாக என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறதாம் ஓபிஎஸ் டீம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+