"கோட்டையில் ஓட்டை".. இது எப்போ.. "சிக்குமா சில்வண்டு".. எடப்பாடி விடமாட்டாரு போலயே.. கச்சேரி இருக்கு
சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புது வியூகம் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம். அதை செயல்படுத்துவதற்கான நாளையும் குறித்துள்ளாராம்..!!
ஓபிஎஸ் திருச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார்.. இதில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் ஆச்சரியத்தை தரவில்லை என்ற விமர்சனங்கள் வலம்வந்தாலும், ஓபிஎஸ்ஸூக்கு இந்த மாநாடு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறதாம்..

காரணம், இந்த அளவுக்கு கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பே எதிர்பார்க்கவில்லையாம்.. இந்த மாநாடு தந்த கூட்டம்தான், அடுத்தக்கட்ட நகர்வையும், உற்சாகத்தையும் ஓபிஎஸ்ஸுக்கு தந்துள்ளதாம்..
உச்சரிப்பு: இதை மாநாட்டு மேடையில், பன்னீர்செல்வத்தின் முகத்திலேயே அதை பார்க்க முடிந்ததாக ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த மாநாட்டில், சசிகலாவின் பெயரை பலமுறை ஓபிஎஸ் உச்சரித்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. மாநாட்டுக்கு சசிகலா, தினகரன் வரவில்லையானாலும், அவர்களின் மீதான நம்பிக்கையை ஓபிஎஸ் வெளிப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது.. அத்துடன், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் தன்னுடைய எதிர்கால திட்டத்தையும் மாநாட்டிலேயே சூசகமாக வெளிப்படுத்தியதையும் அதிமுக கவனிக்காமல் இல்லை.
அதேபோல, இந்த மாநாட்டுக்கு பலவழிகளில் எடப்பாடி தரப்பு முட்டுக்கட்டை போட்டும்கூட, பலனில்லாமல் போயிற்று.. இதுவே ஓபிஎஸ்ஸூக்கு வெற்றிதான் என்கிறார்கள்.. இந்த அளவுக்கு மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க ஓபிஎஸ்ஸுக்கு, ஆகச்சிறந்த பலமாக இருந்தது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்தான்.. இவர் இருக்கும் தைரியத்தைதான், ஓபிஎஸ்ஸின் அரசியல் தொடர்கிறது என்பதால், வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியையும் எடப்பாடி டீம் கையில் எடுத்தது.. ஆனால், அதிலும் தோல்வியே கிடைத்தது..
வைத்திலிங்கம் செக்: இப்போது, வைத்திலிங்கத்துக்கு செக் வைக்க எடப்பாடி அணி ரெடியாகி வருகிறதாம். அந்தவகையில், ஒரத்தநாட்டிலேயே கூட்டம்கூட்டி பலம்காட்ட தயாராகி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.. வைத்திலிங்கத்தை குறிவைத்து அடிக்கும் வேலைகளையும், கையில் எடுத்துவிட்டார்களாம். இதற்கான அசைன்மென்ட்டை முன்னாள் அமைச்சர் சி.காமராஜரிடம் தரப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.. அதன்படியே காமராஜரும், வைத்திலிங்கத்தின் ஆதரவு வட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து தங்கள் பக்கம் இழுத்து, டெல்டாவை தங்கள் பக்கம் தக்க வைக்க முயன்று கொண்டிருக்கிறாராம்..
ஆனால், டெல்டாவை பொறுத்தவரை மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை தாண்டி, அதிமுகவில் வேறு யாரும் அந்த அளவுக்கு பெரிதாக வளரவில்லை.. வைத்திலிங்கத்தின் கோட்டையாகவே டெல்டா விளங்குவதால்தான், திமுக அன்றே பலே தந்திரத்தை கையில் எடுத்தது.. டெல்டாவில் உள்ள அச்சமூக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளவும் முயன்றது.. இப்போதைக்கு தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் போன்றோர்களுக்கு அமைச்சர் பதவி தந்து முன்னுரிமை தரப்பட்டாலும், டெல்டா புள்ளி வைத்திலிங்கமும் திமுக பக்கம் வந்தால் அதிமுக இன்னும் பலவீனமடையும், தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியையும் பலப்படுத்தலாம் என்று திமுக திட்டமிடுவதாக தெரிகிறது.
காமராஜர் செல்வாக்கு: இதனை அன்றே மோப்பம்பிடித்துவிட்ட, எடப்பாடி பழனிசாமி தரப்பு, இதே டெல்டாவுக்கு குறிவைத்தது.. வைத்திலிங்கத்தின் செல்வாக்கை வீழ்த்தி, அந்த இடத்துக்கு மாஜி அமைச்சர் காமராஜை கொண்டுவர வேண்டும் என்ற வியூகத்தையும் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்ததால்தான், வைத்திலிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து, காமராஜ் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டார்.. "எவனாலும் தொட முடியாது" என்று கல்யாண வீட்டில் எடப்படி பேசியதும், வைத்திலிங்கம் தரப்பைதான் என்கிறார்கள்..
இதையடுத்துதான், ஒரத்தநாட்டில் டிடிவியின் வலதுகரமாக இருந்த அமமுக மாவட்டச் செயலாளர் சேகரை அதிமுகவில் இணைத்துள்ளார் காமராஜர்.. இப்படி டெல்டாவுக்கு ஏற்கனவே குறி வைத்து காய்நகர்த்தி வரும்சூழலில், திடீரென ஓபிஎஸ் மாநாடு நடத்திவிடவும், இது எடப்படி தரப்புக்கு எரிச்சலை தந்து வருகிறதாம்.. அதனாலேயே காமராஜருக்கு கூடுதல் அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம். அதன்படி, வருகிற மே 4 ம் தேதி ஒரத்தநாட்டில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடத்தி கூட்டம்காட்ட தயாராகி வருகிறது எடப்பாடி டீம்..
வைத்திலிங்கம்: திருச்சி மாநாட்டுக்கு பதில் தரும் வகையில் அதே டெல்டாவில் அதிலும் ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருக்கும் வைத்திலிங்கத்தின் சொந்த மண்ணில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் தற்சமய பிளானாக உள்ளதாம்.. இந்த பொறுப்பையும் காமராஜர் திறன்பட செய்து கொண்டிருக்கிறார்.. ஒட்டுமொத்தமாக, கொங்குவை போலவே, டெல்டா கோட்டையையும், எடப்பாடி கையில் கொண்டுபோய் சேர்க்க, முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் வைத்திலிங்கத்துக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார்கள்... இதை ஓபிஎஸ் எப்படி சமாளிக்க போகிறாரோ? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications