Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாஸ்டர்" எடப்பாடி.. விட முடியாதுங்க.. 3வது அணி? யாரந்த 8 புள்ளி? திமிறியெழும் பாஜக.. ரெடியாகும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக இடையே அதிருப்திகள் வெடித்து வரும்நிலையில், வரப்போகும் தேர்தலில், இந்த கூட்டணி மீண்டும் சாத்தியமாகுமா? அல்லது 3வது அணி உருவாக போகிறதா? என்கிற சந்தேகம் துளிர்த்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் ஆங்காங்கே, தமிழக பாஜகவுக்கு கிடைத்த வெற்றியானது, அக்கட்சிக்கு கிடைத்த புது பூஸ்ட் என்றே சொல்லலாம்.. அந்த சமயத்தில் பிரதமர் மோடி, தமிழக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போனை போட்டு தேர்தல் ரிசல்ட் குறித்து விசாரித்தாராம்.
பிறகு, "எப்போதுமே தனித்து போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்" என்று நகர்ப்புற தேர்தல் ரிசல்ட் கிடைத்த அன்றைய தினமே, அண்ணாமலையிடம் அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வந்தன.

 தூண்டில் மீன்

தூண்டில் மீன்


இதற்கு பிறகுதான் தமிழக பாஜகவின் அரசியல் வேகமெடுத்தது.. ஒருபக்கம் திமுகவுக்கு டஃப் தந்துகொண்டே, மறுபக்கம், மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்க தூண்டில் போடுவது என துரித நடவடிக்கையில் இறங்கிவிட்டது.. அதுமட்டுமல்ல, வரப்போகும் எம்பி தேர்தலில் 25 இடங்களுக்கு குறி வைத்து காய் நகர்த்த வேண்டும் என்ற உத்தரவும் மேலிட பாஜகவால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.. எனவே, 25 இடங்களுக்கு குறி வைத்தால்தான், குறைந்தது 5 தொகுதிகளையாவது வெற்றி பெற முடியும் என்று நம்புகிறாராம் அண்ணாமலை..

 10 தொகுதிகள்

10 தொகுதிகள்

இதற்காகவே 3 மாதங்களுக்கு முன்பு, பல்வேறு கோணங்களிலும் பல்வேறு கட்டங்களாக, 39 தொகுதிகளிலும், டீமை இறக்கி, பாஜக ஆய்வுகளை மேற்கொண்டது.. அந்த ஆய்வுகளின்படி மொத்தம் 10 தொகுதிகளை டாப் லிஸ்ட் போட்டு மேலிடத்துக்கும் தந்திருந்ததாம். அதாவது, தென் சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகியவைதான் அந்த டாப் 10 தொகுதிகள் ஆகும்.. இந்த 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து, அதற்கான களப்பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறதாம் பாஜக.. களப்பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், கூட்டணி விஷயம் இதுவரை தெளிவாக முடிவாகவில்லை...

 களம் கனல்

களம் கனல்

அதிமுக தயவுடன்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் தமிழகம் உள்ளதால், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதை உணர்ந்துள்ளது.. ஆனால், எடப்பாடியின் பிடிவாதத்தைவிட, அண்ணாமலையின் பிடிவாதம் இப்போது அதிகமாகிவிட்டதாகவே தெரிகிறது.. எடப்பாடியின் கோபத்தைவிட, அண்ணாமலையின் கோபமே, களத்தில் கனலாய் எரிந்து கொண்டிருக்கிறது.. அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்று அண்ணாமலை சொல்வதை, அவரது சொந்த கருத்து என்கிறார்கள் நயினார் நாகேந்திரன் உள்ள தமிழக பாஜக தலைவர்கள்...

 7 கட்சி கூட்டணி

7 கட்சி கூட்டணி

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என்று இரு கட்சிகளின் சீனியர்கள் சொன்னாலும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள், அப்படி ஒரு சுமூகமான சூழலை காட்டவில்லை.. அப்படியானால், அண்ணாமலை சொல்வதுபோல, பாஜக தனித்து போட்டியிடக்கூடுமா? அதாவது பாஜக தலைமையில் கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வி எழுகிறது. கடந்த 2019-ல் அதிமுக + பாமக + தேமுதிக + தமாகா + புதிய தமிழகம் + புதிய நீதிக்கட்சி + என்ஆர் காங்கிரஸ் + இப்படி 7 கட்சிகள் ஒன்றுசேர்ந்துதான் கூட்டணி வைத்தார்கள்.. இத்தனைக்கும் ஜான்பாண்டியன், பூவை மூர்த்தி போன்றோர்களும் இந்த கூட்டணியுடன்தான் பயணித்தனர்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

ஆனால், இப்போது இந்த அளவுக்கு வலுவான கூட்டணி அமையுமா என்று தெரியவில்லை.. பாமக + தேமுதிக இவர்கள் 2 பேரும் என்ன நிலைப்பாடு எடுக்க போகிறார்கள என்பது விளங்கவில்லை.. தேமுதிக அளவுக்கு திமுகவை பாமக எதிர்க்கவில்லை என்றாலும், இணக்கமான சூழல் திமுகவுடன் இந்த கட்சிகளுக்கு இருப்பதாகவே தெரிகிறது. எனினும், பாமக + ஓபிஎஸ் டீம், சசிகலா டீம் + அமமுக, தேமுதிக + புதிய தமிழகம் + புதிய நீதிக் கட்சி + இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க பாஜக முயற்சிக்கலாம் என்கிறார்கள்..

 அனல் தெற்கு

அனல் தெற்கு

அப்படி ஒரு புதிய கூட்டணி அமையும்பட்சத்தில், ஏற்கனவே களப்பணிகளை செய்து கொண்டிருக்கும் டாப் 10 தொகுதிகளான, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவே நேரடியாக இறங்கி தேர்தலை சந்திக்கக்கூட வாய்ப்புள்ளதாம்.. கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக இந்த கட்சிகளுக்கு செல்வாக்கு மிக்க வடக்கு மாவட்டங்களையும், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோருக்கு, அவர்கள் செல்வாக்கு மிகக தொகுதிகளான தென்பகுதிகளையும் ஒதுக்க பாஜக கணக்கு போடும் என்கிறார்கள்.. இதைத்தவிர, புதிய தமிழகம் கட்சியின் மூலம் தேவேந்திரகுல வேளாளர்கள் சமூக வாக்குகள் பல தொகுதிகளில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது..

 சிதறும் கணக்கு

சிதறும் கணக்கு

இதில் விஷயம் என்னவென்றால், மேற்கண்ட தொகுதிகள் எல்லாமே திமுக, அதிமுக கட்சிகள் செல்வாக்கு பெற்ற தொகுதிகள்தான்.. எனவே, பாஜகவின் கணக்கு, திமுகவுடன் சேர்த்து அதிமுகவுக்கும் கலக்கத்தை தருவதாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அதிமுகவின் வாக்கு வங்கி என்பது மிகவும் முக்கியமானது.. எப்போதுமே, திமுகவைவிட அதிக அளவிலான வாக்குவங்கி அதிமுகவுக்கு உண்டு.. அதனால், இந்த வாக்கு பலத்தை இழக்க, பாஜகவுக்கு மனமில்லையாம்.. அதனால், "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தை அவ்வளவு லேசில் விட்டுவிடாது என்றும், விரைவில் "லீடர்களை" சமாதானப்படுத்தி இரு கட்சி கூட்டணியையும் தொடர செய்ய, பாஜக மேலிட தலைவர்கள் முயற்சிப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.. எடப்பாடியின் பிடிவாதம் தளருமா? அண்ணாமலையின் கோபம் தணியுமா? தலைவர்கள் கரம்கோர்ப்பார்களா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+