மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. மிகப்பெரிய அரசியல் மூவ் இது.. காங்கிரசின் அஸ்திவாரத்தையே ஆட்டிட்டாரே!
சென்னை: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பென்ஷன் திட்டத்தில் பெரிய அளவில் இதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பென்ஷன் திட்டம் கண்டிப்பாக அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி கொடுக்கும்.
கிட்டத்தட்ட பழைய பென்ஷன் திட்டம் போலவே.. இந்த திட்டம் இருக்கும். நாடு முழுக்க உள்ள அரசு ஊழியர்களை கவரும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில்தான் இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இத்தனை நாட்கள் ஊழியர்களின் டிஏ தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. காரணம்.. புதிய பென்சன் முறையில், அவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பென்சன் முதலீட்டிற்கு கொடுத்தனர். அதை அடிப்படையாக வைத்தே வருமானம் உயர்த்தப்பட்டது. எப்படியும் பென்சன் அதிகரிக்கப்படாது என்ற அடிப்படையிலேயே வருமானம் உயர்த்தப்பட்டது.
இப்போது வருமானம் உயர்த்தப்பட்டதோடு இல்லாமல்.. அதோடு சேர்த்து.. கிட்டத்தட்ட பழைய பென்சன் முறை போலவே ஒருங்கிணைந்த பென்சன் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் வருமானமும் தற்போது கிடைக்கும், 50% பென்சனும் கிடைக்கும். இதன் மூலம் அரசு ஊழியர்களை கவர முயன்ற எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய செக் வைக்கப்பட்டு உள்ளது. நாடு முழுக்க கிட்டத்தட்ட 24 லட்சம் குடும்பங்களை கவரும் வகையில்.. இந்த மிகப்பெரிய மூவை பிரதமர் மோடி மேற்கொண்டு உள்ளார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியம்: அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது நடைமுறையில் உள்ள புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
அடுத்த நிதியாண்டிலிருந்து, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம், யுபிஏ இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம். யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில்.,. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும்.
'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும்’ 'தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும்’ உள்ள வித்தியாசம்:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின்சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் . மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications