தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி! நாத்தனார் மகளுக்கு நலங்கு வைக்க ஆட்டம் பாட்டத்துடன் வந்த மாமி!
சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக தாய்மாமன் மாட்டு வண்டியில் சீர் கொண்டு சென்ற காட்சி காண்போரை ஆச்சரியப்பட வைத்தது.
ஆலந்தூரை சேர்ந்த கலைவாணன்- அபிராமி. இவர்களுடைய மகள் ஹர்ஷிகா. இவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விழாவுக்கு தாய்மாமன் அபிலாஷ், புத்தாடைகள், நகைகள், இனிப்புகள், சாக்லேட்டுகள், பழங்கள் என மாட்டு வண்டி நிறைய சீர்வரிசைகளை கொண்டு வந்தார்.

பட்டாசுகளை வெடித்து சகோதரியின் மகளுக்கு முதல் மாலையையும் முதல் பட்டு புடவையையும் கொண்டு வந்தார். ஷர்ஷிகாவுக்கு சீர் வரிசைகளை கொண்டு வரும் போது மாமன், மாமி, அவருடைய பிள்ளைகள் எல்லாம் நடனம் ஆடிக் கொண்டே வந்தனர்.
சகோதரியின் மகளோ, சகோதரரின் மகளோ பருவம் அடைந்துவிட்டால், அதில் தாய்மாமனுக்கும் அத்தைக்கும்தான் பெரிய செலவு இருக்கும். எல்லாரையும் விட அவர்களுடைய சீர்தான் மிகவும் முக்கியமானதாகும். அது போல் தாய்மாமன்தான் முதல் மாலையை அந்த பெண்ணுக்கு அணிவிக்க வேண்டும்.
திருமணத்தின் போதும் கூட அவர்தான் அணிவிக்க வேண்டும். அது போல் அத்தை உறவும் முக்கியமானது. நலங்கு வைக்கும் போது அத்தைக்குதான் முதல் மரியாதை! இது போல் பூப்பெய்த விழாக்களுக்கு அவரவர் வசதிக்கேற்ப நகைகள், புடவைகள் என சீர் செய்வது வழக்கம்.
வண்டி வண்டியாக சீர் செய்வார்கள். இரு தாய்மாமன்கள் இருந்தால் இருவரும் சேர்ந்து சீர்களை கொண்டு வருவார்கள். இதே போல் திருமணத்தின் போதும் தாய்மாமன் சீர் கொண்டு வருவார். தாயின் மறுஉருவம்தான் தாய்மாமன் என்பார்கள். அப்படிப்பட்ட தாய்மாமன் உறவுகளை சொல்லும் நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன.
அது போல் திருமணங்களில் மொய் எழுதும் போது தாய்மாமன் மொய் எழுதிய பிறகுதான் மற்றவர்கள் எழுதுவார்கள். அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் தரப்படும். குடும்பத்தில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் தனது சகோதரியின் மகள் அல்லது மகனுக்கு தாய்மாமன் கொண்டு வரும் சீர்தான் அந்த ஊர் முழுக்க பேச்சாக இருக்கும்.
இந்த பழக்கம் தென் மாவட்டங்களில் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது உறவுகளை வலுவாக்கும். திருமணம் என்றில்லை, காதணி விழாவுக்கு கூட தாய்மாமன், சகோதரியின் குழந்தைக்கு மாலை போட்டு அவருடைய மடியில் உட்காரவைத்து காது குத்தப்படும். அது போல் மொட்டை போடும் சடங்கும் அப்படித்தான்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications