மண்டையை பிளக்கும் வெயில்.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்.. வட தமிழகத்திற்கு ஸ்வீட் நியூஸ்
சென்னை: தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இந்த முறை கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதேபோல பல தமிழகம் உட்பட பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் கோடைக் காலத்திற்கு முன்னரே பல மடங்கு அதிகரித்தது. பல மாவட்டங்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை சதமடித்து வருகிறது.

11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி என 11 மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையானது 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்வைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

அனல் காற்று
மேலும் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் அபாயம் உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகம், புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு
அதேநேரம் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக வட தமிழகத்தில் அமைந்துள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வரும் 9ஆம் தேதி தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

தலைநகரில் என்ன நிலை
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஈரோடு மாவட்டத்தில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications