"கை" வெப்பீங்களா.. விடமாட்டோம்.. இது தமிழ்தேசிய மண்.. பொங்கிய திருமுருகன் காந்தி.. கவனிக்கும் பாஜக
சென்னை: "நிலக்கரி சுரங்க விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கு அஞ்சி மோடி அரசு பின்வாங்கி உள்ளது" என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இனி தமிழகத்தின் நிலத்தின்மீது ஒருபோதும் கை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் திருமுருகன் காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.. இதையடுத்து, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்தவகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல, தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

கருப்பு சட்டை: இதற்கு நடுவில், தி.நகரில் பெரியார் சிலைக்கு முன்பாக மே 17 இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.. இவர்கள் அனைவருமே கைகளில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் முழக்கமிட்டனர். இந்நிலையில், மே 17 இயக்கத்தின் திருமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்..
மறுப்பு : அப்போது அவர் சொல்லும்போது, "ஒன்றிய அரசின் நிறுவனங்களில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்படுகிறது.. நீட் தேர்வை கொண்டு வந்து, தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை, மருத்துவ கல்வியை அவர்கள் கிடைக்கவிடாமல் தொடர்ச்சியாக சதி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் என்கின்ற இந்த பதவியை வைத்துக் கொண்டு, பாஜக நபரை வைத்து, மாநில உரிமைகளை மாநில உரிமைகளை நசுக்குகின்ற வகையிலும், ஆன்லைன் ரம்மி மசோதா உட்பட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கின்ற வகையிலும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
தலித்துகள்: இந்த ஆளுநரை திரும்ப பெறுகின்ற வேலையை மோடி அரசு செய்யவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் நீண்ட கால மக்களின் வரலாற்றை கொச்சைப்படுத்தும் விதமாக, தமிழக ஆளுநர் பல இடங்களில் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் போராடும் மக்களை கொச்சைப்படுத்துகிறார்.. இதெல்லாம் காரணம், மோடி அரசின் துணிச்சல்தான், ஆதரவுதான் காரணம்.. சமஸ்கிருதத்துக்கு அதிகமான நிதியுதவி, இந்தி வளர்ச்சிக்கு நிதியுதவி, ஆனால், தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி கிடையாது.. இஸ்லாமியர்கள் மீதும், தாக்குதல் நடத்தப்படுகிறது.. வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.. கிறிஸ்தவர்கள், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

சிதையும் நேசம்: இந்தியாவின் ஒற்றுமையை, மக்களிடம் உள்ள நேசத்தை சிதைக்கும் வகையில், மோடி அரசு செயல்பட்டு வருகிறது.. அதனால்தான், இந்த மோடி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று அன்று பிரதமராவதற்கு முன்பேயே அதாவது, பிரதமர் வேட்பாளராக மோடி என்று அறிவிக்கப்பட்டபோதே நாங்கள் எல்லாம் ஒன்று திரண்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.. 2016 முதல் இன்றுவரை மோடி என்பவர் தமிழ்நாட்டுக்கு விரோதமானவர்.. பாஜக என்பது தமிழர்களுக்கு விரோதமான கட்சி.. வடநாட்டு கட்சி.. தமிழர் உரிமையை மறுக்கும் கட்சி.. தமிழர்களை இழிவுபஈடுத்தும் கட்சி, தமிழ் மொழியை நசுக்கும் கட்சி என்று சொல்லி, நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.
அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் சந்தையை திறந்துவிட்டு, இந்திய நிறுவனங்களை விற்றுவிட்டு, தமிழ்நாட்டின் சொத்துக்களை பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு, தாரைவார்க்கக்கூடிய மோடி, தமிழகத்துக்கு வரக்கூடாது என்பதால்தான், அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும்விதமாக, விடுதலை தமிழ்ப்புலிகள், தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழர் விடுதலை கழகம், மே 16 இயக்கம் போன்ற இயக்கங்கள் இந்த கருப்பு கொடிஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம்.
எங்கள் முழக்கம் என்பது, இது சுயமரியாதை மண், இது திராவிட இயக்க மண். இது தமிழ்தேசிய மண். தமிழர் நலனைத்தான் இது முன்னிறுத்தும்.. தமிழர்களுக்கு விரோதமான ஆரிய இனவெறியோடு, சனாதன வெறியோடு, தமிழகத்தில் கால் வைக்கக்கூடிய பாஜக தலைவர்களுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பை தெரிவிப்போம்.. நிலக்கரி சுரங்க விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கு அஞ்சி, மோடி அரசு பின்வாங்கி உள்ளது.. அதை நாங்கள் வரவேற்கிறோம்..
தமிழகத்தின் உரிமைக்குரலாய் வெளிப்படுத்திய கட்சிகளுக்கும், இதற்காக களத்தில் போராடி உயிர்நீத்த நம்மாழ்வார் ஐயாவுக்கும், ஏனைய தோழமை ஜனநாயக இயக்கங்களுக்கும் கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறோம்.. தமிழகத்தின் போராட்ட எதிர்ப்பை கண்டு அஞ்சி, நிலக்கரி விவகாரத்தில் இந்த நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது... இனி தமிழகத்தின் நிலத்தின்மீது ஒருபோதும் கை வைக்க அனுமதிக்க மாட்டோம். என்எல்சி விவகாரத்தில் அந்த 15 ஆயிரம் நிலத்தையும் மீட்டெடுப்போம்" என்றார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications