இந்தி திணிப்பு போராட்டத்தில் வீரமரணம்.. ரயில் மோதி சிகிச்சையில் இருந்த மே17 சிவா திலீபன் உயிரிழப்பு
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, "தமிழ் வாழ்க" என முழக்கமிட்டவாறு ரயில் முன் பாய்ந்து, ரயிலில் அடிபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மார்ச் 12 ஆம் தேதி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் போராட்டம் தொடர்ந்தது.

சென்னை பூங்கா (பார்க்) ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்து மே 17 இயக்கத்தினர் திருமுருகன் காந்தி தலைமையில் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் ரயில் நிலையத்திலிருந்து ஒருசில பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவா திலீபன் என்ற சிவக்குமார் 'தமிழ் வாழ்க' என முழங்கியவாறு திடீரென ரயில் முன் பாய்ந்தார். இதனால் பலத்த காயமடைந்த அவர்ம் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "உயிரை அல்ல, உழைப்பைக் கொடுங்கள்" எனத் தெரிவித்து, சிவா திலீபன் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற பல்வேறு அமைப்பினர் மருத்துவமனையில் சிவா திலீபனை சந்தித்து, மருத்துவர்களிடம் அவரது நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், சிவக்குமார் என்ற சிவா திலீபன் (56) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, ரயிலில் அடிபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications