ஸ்டாலின் வரும்வரை.. ரயிலில் அமராமல் நின்று கொண்டிருந்த மனைவி துர்கா! அந்த ரியாக்சன் தான் ஹைலைட்
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் ரயிலில் மயிலாடுதுறையில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று புறப்பட்டார். அவரை வழியனுப்ப ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக ரயிலில் அமராமல் அவரது மனைவி துர்கா நின்று கொண்டிருந்ததும், தொண்டர்களை பார்த்து காட்டிய சைகையும் கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். சென்னை மற்றும் அதனை சுற்றி பகுதிகள் என்றால் அவர் காரில் செல்வார். பிற மாவட்டங்கள் என்றால் விமானங்களில் அவர் பயணித்து அதன்பிறகு கார் பயணத்தை மேற்கொண்டு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இதற்கிடையே தான் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ரயில் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். முதல்வரான பிறகு கடந்த 2022ல் முதல் முதலாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயில் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு இப்போது மீண்டும் அவர் ரயில் பயணத்தை தேர்வு செய்துள்ளார்.
அதாவது மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டத்தை நாளை காலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். காலை 10 மணிக்கு விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் ரயிலில் மயிலாடுதுறைக்கு இன்று புறப்பட்டார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். இன்று இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் இறங்கி கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள துர்கா ஸ்டாலின் வீட்டிற்குச் செல்கிறார். இரவில் அங்கு அவர் தங்கிவிட்டு நாளை காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினுடன் மனைவி துர்காவும் இன்று ரயிலில் பயணம் செய்கிறார். இருவரையும் வழியனுப்ப ஏராளமான திமுக தொண்டர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். முதல்வர் ஸ்டாலின் ரயில் வாசலில் நின்று கொண்டு தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி சில நிமிடங்கள் நின்றார். இந்த வேளையில் ரயில் பெட்டிக்குள் இருந்த துர்கா ஸ்டாலின் இருக்கையில் அமராமல் ஸ்டாலினுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று தொண்டர்கள் துர்காவை பார்த்தும் உற்சாகமாக கையசைத்தாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அவர் ஸ்டாலினுக்கு பின்னால் நின்று கொண்டே கையசைத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. மயிலாடுதுறையில் நாளை நிகழ்ச்சியை முடிக்கும் முதல்வர் ஸ்டாலின் மதியம் திருச்சியில் இருந்து சென்னை வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து மாலை 6.15 மணிக்கும் மீண்டும் சென்னை வந்தடைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications