MBBS, BDS மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று தொடக்கம்.. மொத்தம் எவ்வளவு சீட்? முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலின் அடிப்படையில், மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்லூரிகளை இன்று தேர்வு செய்ய உள்ளனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மொத்தமாக 6,326 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளையும் சேர்த்து 1,768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன.

MBBS and BDS medical counselling starts today in tamilnadu

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்ததனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியானது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேர் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2,993 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் எம்.பி.ப்.எஸ், பி.டி.எஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-2024 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு, www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இன்று நடத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். ஆகஸ்ட் 3ஆம் தேதி கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன், தமிழக அரசின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தார். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சூர்ய சித்தார்த், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் ஆகியோர் தரவரிசை பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+