இதுவரை கட்சிக்காக என்ன செய்திருக்கிறீர்? திருப்பூர் துரைசாமிக்கு மதிமுக தொண்டன் சாட்டையடி கடிதம்!
சென்னை: இதுவரை கட்சிக்காக என்ன செய்திருக்கிறீர் எனக் கேட்டு திருப்பூர் துரைசாமிக்கு மதிமுக தொண்டர் ஒருவர் சாட்டையடி கடிதம் எழுதியுள்ளார்.
திமுக கூட்டணியே கூடாது என்று வாதாடி வரும் நீங்கள் இப்போது, கட்சியை திமுகவுடன் இணைத்து விட வேண்டும் என்று கூறுவதின் பின்னணி என்ன? என வினவியுள்ளார்.
இது தொடர்பாக திருப்பூர் சு.துரைச்சாமிக்கு மதிமுக தொண்டன் தி.மு.இராசேந்திரன் எழுதியுள்ள பகிரங்கக் கடிதம் வருமாறு..

''வணக்கம்..
தாங்கள் எனது தலைவர் வைகோ அவர்களுக்கு, கடிதம் எழுதியதாக இன்று ஏப்ரல் 29 ஒரு செய்தித்தாளில் கண்டேன். உங்களைப் போல லாப நோக்கத்தை குறிக்கோளாக கொண்ட அரசியல் வாதி போல அல்லாமல் எந்த பிரதிபலனும் எதிர்பாராத மறுமலர்ச்சி
திமுக வின் உணர்ச்சிமிகு உண்மைத் தொண்டர்கள் சார்பில் தங்களுக்கு எனது கீழ்க்கண்ட திறந்த நிலை பதில் கடிதத்தை அனுப்புகிறேன்.
1992 ஆம் ஆண்டு, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கோவை மாவட்ட திமுக தொழிற்சங்கங்கள் சார்பில் வாங்கப் பட்டிருக்கின்ற சொத்துக்கள் அனைத்தையும் கட்சியின் அறக்கட்டளையில் சேர்க்க வேண்டும் என்று அப்போதைய தொ.மு.ச பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி அவர்களுக்கு உத்தரவிட்டார். அதிலிருந்து அறிவாலயம் பக்கமே தலை வைத்துப்படுக்காத தாங்கள், தலைவர் வைகோ தலைமையில் காலம், மறுமலர்ச்சி
திமுக என்ற கட்சியைத் தோற்று வித்த போது எவரும் அழைக்காமலேயே அதில் வந்து தன்னை இணைத்துக் கொண்டீர்கள்.
அறிஞர் அண்ணா அவர்களோடு பயணித்தவர் என்ற காரணத்தினால், தலைவர் வைகோ அவர்கள், தங்களுக்கு,உயரிய இடம் கொடுத்து மூத்த அண்ணனாக உங்களை மதிப்போடு நடத்தி உயர்ந்த பொறுப்பு அளித்து கெளரவித்தார். உங்களுக்கு இல்லாத பல திறமை எல்லாம் இருப்பதாக புகழ்ந்து பெருமைப்படுத்தினார்..நாங்களும் மதிப்பு கொடுத்து நடந்து கொண்டோம்..
தலைவர் வைகோ அவர்கள், உடல்நலம் சற்று பாதித்தபோது, மூன்று ஆண்டுகளாக கட்சியின் மீது எந்த அக்கறையும் கொள்ளாமல் அவைத் தலைவரான தாங்கள்,தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளவில்லை.எனக்கு தெரிய எப்போதுமே தாங்கள் கட்சி வேலையை செய்ததே இல்லை...மேடையில் உட்கார்ந்து பேசுவதோடு சரி.. சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி கூடவே கூடாது என்று கடுமையாக
கூறி வந்த நீங்கள் (அவை தலைவர் திருப்பூர் துரைசாமி) கூட்டணி வேட்பாளர்களுக்கு வேலை செய்யக்கூடாது என்று கட்சியினர் பலருக்கு சொன்னீர்கள் என்பதை எல்லோரும் அறிவர்..
நீங்கள் யார் யாரிடம் அவ்வாறு சொன்னீர்கள் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்..இது கட்சியில் எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்..
இப்படி,கட்சிக்கட்டுபாட்டை மீறிய செயல்பாடுகளுக்காக,அன்றே உங்களை தூக்கி எறிந்து இருக்க வேண்டும் இயக்கம்..உள்ளாட்சித் தேர்தலிலும் இதே வேலையைத்தான் நீங்கள் செய்தீர்கள் என்பது திருப்பூர் பகுதி கட்சியினருக்கு நன்கு தெரியும்..
கட்சி உறுப்பினர் சேர்ப்பு, கிளைக்கழக, வட்டக் கழக, பேரூர், ஒன்றிய, நகரக் கழக தேர்தல்களில் கடந்த 10 மாதங்களாக தலைவர் வைகோவும், ஒட்டு மொத்தக் கட்சியும் ஈடுபட்டு வருகின்றபோது, அவைத்தலைவர் என்ற முறையில் பொதுச்செயலாளரிடம் கலந்து பேசி தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை ஏதேனும் செய்தீர்களா?
இந்த கட்சி குறித்து கவலைப்படுகிற, கேள்வி கேட்கிற உரிமை உங்களுக்கோ உழைக்காத எவருக்குமோ துளியும் கிடையாது என்பது அடிமட்ட கட்சித் தொண்டர்களின் திட்டவட்டமான கருத்து ஆகும் !
கழகத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் 99.9% பேர் துரை வைகோ கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து இயக்கத்தை வழிநடத்த முன்வர வேண்டும் என்று விரும்பினர். தலைவர் வைகோ விரும்ப வில்லை எனினும், வரலாறு துரை வைகோ அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்று கட்டாயச்சூழலை உருவாக்கியது.
அதனை மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் பொதுக்குழுவும் முழுமையாக அங்கீகரித்து, மதிமுகவின் தலைமைக் கழக செயலாளர் பொறுப்பை இளந்தலைவர் துரை வைகோ ஏற்றார். அது முதல், ஓய்வறியாது தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று பணியாற்றி, கழக முன்னணியினருடன் இணைந்து கழகத்தை கட்டிக்காக்கவும் அதன் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் அவர் அரும்பணி ஆற்றி வருகிறார்.
அவரால் இயக்கத் தோழர்களிடம் பெரும் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 10 இலட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர்.
தொழிற்சங்க வாதியாக இருந்து தொழிலதிபராக உயர்ந்த தாங்கள், எந்தப் பலனும் அடையாத வைகோவே உயிர் மூச்சு என நினைக்கிற ஏழைத் தொண்டர்களாக கிளை, பேரூர், நகர, ஒன்றியச் செயலாளர்கள் அரும்பாடுபட்டு ஒரு கட்சிக்கு உறுப்பினர் சேர்த்ததை போலியாக சேர்த்து உள்ளனர் என கூச்சம் நாச்சம் இல்லாமல் சொல்கிறீர்களே!
எந்த வேலையும் செய்யாமல் கட்சியின் உயர்ந்த பொறுப்பில் உள்ள தங்களின் இந்த அபாண்டப் பழிச்சொல்லால் 30 ஆண்டுகளாக பிரதிபலன் பாராது உழைத்துக் கொண்டு இருக்கின்ற கட்சித் தொண்டன் வேதனையால் துடிப்பதை நீங்கள் அறிவீர்களா?
திமுக கூட்டணியே கூடாது என்று கட்சிக் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் வாதாடி வந்த அவைத் தலைவரான தாங்கள், இப்போது, கட்சியை திமுகவுடன் இணைத்து விட வேண்டும் என்று கூறுவதின் பின்னணி என்ன? உங்களை ஏவி விட்டவர்கள் யார்?பத்திரிக்கை ஊடகங்களுக்கு மதிமுகவை பலவீனப்படுத்த தீனி போட்டு கொண்டு இருக்கின்ற தீய சக்திகள் எவை?இவையெல்லாம் அரசியல் ஞானம் அதிகம் கொண்ட கழகத் தொண்டர்களுக்கு நன்றாகத் தெரியும்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மே 6ஆம் தேதி 30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. புதுப்பொலிவும் வலிமையும் கழகத்தில் பாய்ந்து இருப்பதை புல்லூருவிகள் பார்க்கட்டும்...
மறுமலர்ச்சிதிமுகவின் இலட்சியப் பயணம் இன்னும் வேகம் எடுக்கும்..நம் தலைவர் அறிஞர் அண்ணாவும் அவரோடு களத்தில் நின்ற சின்னப்
பையன்களும் 60களில் தமிழக அரசியலில் கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்று வரலாற்றை புரட்டிப்போட்டார்கள்.. அன்று நீங்களும் அந்தப் பட்டியலில் உண்டு.
இன்றும் சின்னப்பையன்கள் திகைக்கவைக்கும் பெரிய சாதனைகளை நிகழ்த்தி சரித்திரம் படைப்பார்கள்..
எங்களை விட்டு வெகு தூரம் போய்விட்டீர்கள். தி.மு.க .. மதிமுக தோழர்களின் இரத்தத்தில் உருவான கோவை டாடாபாத் தொழிற்சங்க கட்டிடம் போனதைப் போல், நாங்கள் இலட்சியத் தாகத்தோடு தலைவர் வைகோ வழிகாட்டுதலில் களமாடிக் கொண்டு இருப்போம்.. எனது பதிலடி தொடரும்.''
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications