லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் மதிமுக.. கூட்டணி பேச குழு அமைப்பு.. தேர்தல் அறிக்கை குழுவும் தயார்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தைக்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் திமுக குழு அமைத்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளரும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலை திமுக கூட்டணியுடன் இணைந்து சந்திக்கிறது மதிமுக. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் லோக்சபா தேர்தல் தொகுதி உடன் பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குழு அமைத்துள்ளது. அந்த குழுவில் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர், மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர், ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர், வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மறுமலர்ச்சி திமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தி.மு.இராசேந்திரன் -கழகத் துணைப் பொதுச்செயலாளர், ஆ.வந்தியத்தேவன், கழக கொள்கை விளக்க அணி செயலாளர், வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் -கழக தணிக்கைக் குழு உறுப்பினர், ப.த.ஆசைத்தம்பி - கழக இளைஞரணி செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ இந்த இரண்டு குழுக்களில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications