சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: MLA சீட் கிடைக்காததால்... துரை வைகோ மீது ஈஸ்வரன் பழி -மதிமுக மகளிரணி நிர்வாகி ரொஹையா

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத கோபத்தில் தான் ஈஸ்வரன் மதிமுகவிலிருந்து விலகினாரே தவிர, துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது காரணமல்ல எனக் கூறுகிறார் மதிமுக மாநில மகளிரணிச் செயலாளர் ரொஹையா.

மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக வைகோ மகனுக்கு பதவி வழங்கப்பட்டது முதல் அக்கட்சியை மையமாக வைத்து 2 நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

இந்நிலையில் இது தொடர்பாக மதிமுக மாநில மகளிரணிச் செயலாளர் டாக்டர் ரொஹையாவிடம் நாம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

எம்.எல்.ஏ. சீட்

எம்.எல்.ஏ. சீட்

''மதிமுக இளைஞரணிச் செயலாளராக இருந்து இப்போது கட்சியிலிருந்து விலகியிருக்கும் ஈஸ்வரன் எனக்கு நல்ல நண்பர். அவர் சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். கூட்டணி காரணமாக அவர் கேட்ட தொகுதியை தலைவரால் வழங்க முடியவில்லை. இதனால் அப்போது முதலே ஈஸ்வரன் அதிருப்தியில் இருந்தது கட்சியில் உள்ள பலருக்கும் தெரியும்.''

என்ன காரணம்?

என்ன காரணம்?


''இதனால் துரை வைகோவுக்கு பதவி கொடுக்கப்பட்டதை காரணமாக வைத்து இப்போது அவர் விலகியிருக்கிறார். ஈஸ்வரன் வகித்து வந்த மதிமுக இளைஞரணிச் செயலாளர் பதவியை பறித்து துரை வைகோவுக்கு தலைவர் கொடுக்கவில்லை. இதனால் துரை வைகோ குறித்து ஈஸ்வரன் விமர்சிக்கத் தேவையில்லை என்பதே எனது கருத்து. சீட் கிடைக்காத கோபத்தை வெளிப்படுத்த இந்த நிகழ்வை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் ஈஸ்வரன்.''

விளக்கம்

விளக்கம்

மதிமுக மாநில மகளிரணிச் செயலாளர் ரொஹையாவின் கருத்து குறித்து விளக்கம் அறிய ஈஸ்வரனை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, ''வைகோவின் மகனை புகழ்ந்து பேசி அரசியலில் வாய்ப்பு பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. எம்.எல்.ஏ. சீட்டுக்காக 'தம்பியிடம் ஒரு வார்த்தை சொல்' என பலரும் என்னை சட்டமன்றத் தேர்தலின் போது வலியுறுத்தினார்கள. ஆனால் அதற்கு எனது மனம் இடம் கொடுக்காததால் சீட்டுக்காக வைகோ மகனிடம் நான் நிற்க மறுத்துவிட்டேன்.''

பதிலடி

பதிலடி

''கட்சி என்று இருந்தால் பலரும் சீட் கேட்கத்தான் செய்வார்கள். ஏன் யாருமே கேட்கக்கூடாது என்கிறாரா ரொஹையா. வைகோவை தான் தலைவராக ஏற்க முடியுமே தவிர, அவரது குடும்ப உறுப்பினர்களை எல்லாம் ஏற்க முடியாது'' என ரொஹையா கருத்துக்கு பதில் கொடுத்தார் ஈஸ்வரன். மேலும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறினார்.

English summary
Mdmk Womens wing secretary Dr Rohaiya criticize about Eswaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X