சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலங்காநல்லூருக்கு புடின் வருகிறாரா.. புற்றீசல் போல் பரவும் செய்தி.. வெளியுறவுத் துறை விளக்குமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Russian president Putin | Alanganallur Jallikattu | புடின் வருகையை வெளியுறவுத் துறை விளக்குமா?

    டெல்லி: மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு புடின் வருகை என்ற செய்தி புற்றீசல் போல் வேகமாக பரவி வரும் நிலையில் அது குறித்து வெளியுறவுத் துறை விளக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தினர். இதனால் மாமல்லபுரம் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது.

    தமிழர்களின் மனங்களும் மகிழ்ந்தன. சீன அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினும் தமிழகத்துக்கு வருகை தருகிறார் என தகவல்கள் வெளியாகின.

    தமிழகம்

    தமிழகம்

    அதாவது மதுரையில் தை மாதம் (ஜனவரி மாதம்) நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்காக அவர் தமிழகம் வருகை தருகிறார் என்ற செய்தி புற்றீசல் போல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.

    புகழ்

    புகழ்

    ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தமிழக அரசும் ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகளும் சேர்ந்து நடத்துகின்றன. இந்த போட்டியை புடின் காண வந்தால் இந்த இடங்களுக்கு மேலும் புகழ் சேரும் என தமிழக மக்கள் மகிழ்கின்றனர்.

    பட்டித்தொட்டி

    பட்டித்தொட்டி

    தமிழகத்துக்கு புடின் வருகை குறித்து உறுதிப்படாத செய்திகள் வருகின்றனவே தவிர அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் மத்திய அரசிடம் இருந்தோ ரஷ்ய அரசிடம் இருந்தோ இதுவரை வரவில்லை. ஆனால் செய்தி மட்டும் பட்டித் தொட்டியெல்லாம் பரவிவிட்டது.

    வெளியுறவுத் துறை விளக்கம்

    வெளியுறவுத் துறை விளக்கம்

    அடுத்த ஜனவரியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட புடின் தமிழகத்துக்கு வருகை தருகிறார் என்ற செய்தி உண்மையானதா இல்லையா என்பதை வெளியுறவுத் துறை விளக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Ministry of External Affairs has to clarify whether Vladimir Putin visits Tamilnadu by January 2020 or not?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X