மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க மருத்துவ கல்லூரிகள் மறுக்க முடியாது- ஹைகோர்ட்
சென்னை: மருத்துவ மேற்படிப்பு படிப்பின் போது, மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித்தொகையை வழங்குவதற்கு மருத்துவ கல்லூரிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் காலத்தில் மருத்துவமனைகளில் ஆற்றிய பணிக்கான உதவித்தொகையை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நான்கு வாரங்களில் மாணவர்களுக்குரிய உதவித்தொகையை வழங்க வேண்டும் என மருத்துவ கல்லூரிகளுக்கு 2021ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.
மாணவர்கள் தங்கள் படிப்பு கட்டணத்தை செலுத்தாததால், உதவித்தொகை கோர உரிமையில்லை என மருத்துவ கல்லூரிகள் தரப்பில் வாதிடப்பட்டது. கட்டணம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் கல்லூரிகளுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டால், தற்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்ட மாணவர்களிடம் இருந்து வசூலிப்பது சிரமம் எனவும் மருத்துவ கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்காலிகமாக கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், அதுவும் அதிகமாகவே செலுத்தியுள்ளதாகவும், மூன்று ஆண்டுகள் தங்களிடம் இருந்து உழைப்பை பெற்றுக் கொண்ட நிலையில் உதவித்தொகை வழங்க மறுக்க முடியாது என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
கல்லூரிகள் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின்படி கல்விக் கட்டணத்தைச் செலுத்தியுள்ள மாணவர்கள், கூடுதல் கட்டணத்தை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவித்தொகை வழங்க முடியாது என மருத்துவ கல்லூரிகள் கூற முடியாது எனத் தெரிவித்து, விதிகளின்படி ஆறு வாரங்களுக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையை வழங்க வேண்டும் என மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications