மீனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2021: சம்பள உயர்வுடன் பதவி உயர்வு தேடி வரும் மாதம்
ஏப்ரல் மாதத்தில் கிரக மாற்றங்கள் அதிகம் உள்ளன. நவ கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தினால் மீன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது.
சென்னை: மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் பண வருமானத்துடன் பதவி உயர்வு தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி மீன ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சியால் குதூகலம்
உங்க ராசிநாதன் குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் நுழைகிறார். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். திருமண சுப காரியம் ஏற்படும். அலுவலகத்தில் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வுடன் பதவி உயர்வு தேடி வரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.

செல்வாக்கு அதிகரிக்கும்
12ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் தொழில் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்கலாம். சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கையில் குதூகலம்
குடும்ப வாழ்க்கையில் குதூகலம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பாக திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெண்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

பரிகாரம் என்ன
காது பிரச்சினை வரலாம் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் பேசும் போது கவனம் தேவை. சகோதர சகோதரிகளால் சில சங்கடங்கள் வரலாம் கவனம் தேவை. அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்பு நீங்கும். சிவ ஆலயத்தில் தேன் அபிஷேகம் செய்ய பிரச்சினைகள் நீங்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications